பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 99 மீனாட்சியின் கண்களில் தோன்றி, கன்னத்தில் உருண்டு மார்பை நனைத்த நீரைப் பார்த்து, காத்தாயி திடுக்கிட்டாள். "எதுக்கும்மா... அழுவிறிய?" "ஒண்ணுமில்ல... எதையோ நினைச்சேன்... என்னமோ வருது..." "அழாத ராசாத்தி... ஆயுசு முழுவதும் அழுதவியளும் இல்ல... சிரிச்சவியளுமில்ல... வேணுமுன்னா பாருங்க... இன்னும் கொஞ்ச நாளையில... ஒனக்கு ஒரு கொறயும் இருக்காது... இருக்கிற கஷ்டமுல்லாம் பறந்துடப் போவுது பாரு..." "எப்ப விடியுமோ... என் தலயில என்ன எழுதியிருக்கோ..." "ஒன் அம்மா படுத பாட்ட பாத்தியாடா என் ராசா... பால் கொடுக்க வேண்டியவா... கண்ணிர கொடுக்கிறத பாத்தியாடா என் ராசா... இருக வேண்டியது இல்லாம... இல்லாமப் போகவேண்டியது இருக்கத பாத்தியாடா... கண்ணு. இந்தா... அம்மா... கண்ணிர துடடா... அம்மாவ அழாதன்னு சொல்லுடா..." காத்தாயி, குழந்தையின் கையை எடுத்து மீனாட்சியின் கன்னத்தில் வைத்துத் துடைத்தாள். தாய்க்காரி, குழந்தையின் பிஞ்சு விரல்களைப் பிடித்தபடி, சிறிதுநேரம் அப்படியே லயித்திருந்தாள். பிறகு "எம்மா... எய்யா... ஏ அண்ணாச்சி. மார்புல வலிக்கே... வலி தாங்க முடியலியே... தாங்க முடியலியே" என்றாள். காத்தாயி குழந்தையை எடுத்து. பாயில கிடத்தி விட்டு, மீனாட்சியின் தலையைத் தூக்கி, தன் மடியில் வைத்துக் கொண்டாள். சிறிது நேரம் மெளனம். பின்னர், அந்த மெளனமே வலித்ததால் காத்தாயி ஆதரவாகப் பேசினாள். "இனுமயும் பொறுக்கதுல அர்த்தமில்ல... என் வீட்டுக்காரரு மேளத்துக்கு போயிட்டு... இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு... இருக்கிற பணத்த பிடுங்கிக்கிட்டு அவரயும் கூட்டிக்கிட்டு வாரேன்... எந்தப் புண்ணியவான் கிட்டயாவது... வண்டிய கேட்டு... ஒன்ன... ஆஸ்பத்திரில சேத்துடுறோம். கவலப்படாத கண்ணாட்டி... அதுக்குள்ள ஒன் அண்ணாச்சியும் வந்துடுவாரு... இந்த சின்னான் நொறுங்குவான கானுமே..." "அண்ணாச்சிய காணுமே காத்தாயி... ஏதாவது..." "அவரு... சீக்கிரமா வந்தாத்தான் தப்பு... நேரமாவுதுன்னா என்ன அர்த்தம்... அதிகாரிமாரு நல்லா விசாரிக்காவன்னு அர்த்தம். பாரேன் வேணுமுன்னா... மவராசன்... மாட்டோடு வந்து நிக்கப் போறாரு... அப்போ நான் போயிட்டு. செத்த நேரத்துல வந்துருதேன்." மீனாட்சி. தலையாட்டி விடை கொடுத்தாள். அப்படித் தலையாட்டியதில் மார்பு வலிக்க, முதுகை வளைத்தாள். அவளையே, இமை தட்டாது சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த காத்தாயி, அவளை