பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஊருக்குள் ஒரு புரட்சி பஸ், போய்க் கொண்டிருந்தது. மேம்பாலத்திற்கு அருகே இருந்த ஒரு ஜவுளிக்கடையில், குமார் கோஷ்டி, புடவைகளை விரித்துப் பார்த்தார்கள். கல்யாணத்திற்கு, துணி எடுக்கிறார்கள் போலும். ஆண்டியப்பனின் கண்களிலும், அவர்கள் அகப்பட்டார்கள். அவர்களைப் பார்த்து, அங்கேயே கர்ஜனை செய்ய வேண்டும் என்பதுபோல் துடித்த ஆண்டி, அந்தத் துடிப்பை, கண்களில் மட்டும் ஏவுகணைபோல் விட்டுக் கொண்டான். அவன், நெற்றியைச் சுழித்ததால் ஏற்பட்ட புருவ வளைவுகள், மூன்றாவது கண்போல் மின்னியது. வார்த்தை பிரளயங்களாக வராமல் போன வேகம், புதியதோர் ஆறுமுகத் தீப்பொறிபோல, கண்களை அக்கினிக் கட்டிகளாக்கின. 14 மத்தியான வேளை, சூரியன் நெருப்பைக் கக்கிக் கொண்டிருந் தான். அக்கினிக் கட்டிகள் ஆங்காங்கே விழுவது போல், ஆண்டியப் பனின் வீட்டுக்கு வெளியே கட்டாந்தரை, பொசுங்கிக் கொண்டிருந்தது. வீட்டுக் கூரை தீப்பிடிப்பது போல், சிவந்து கொண்டிருந்தது. வலியைக் கடிப்பதுபோல், மீனாட்சி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள். காத்தாயி, அவள் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஒட்டடைக் கம்பு மாதிரி உடம்பும், அந்தக் கம்பு முனையில் உள்ள குஞ்சம் போல தலையும் கொண்ட குழந்தை. காத்தாயியின் மார்பு முனையை, பசு மாட்டின் மடுவை முட்டி முட்டிக் குடிக்கும் கன்றுக்குட்டி போல, லேசாக தலையைத் துக்கியது. பிறகு வலுவிழந்ததுபோல, தலையை காத்தாயியின் வலது கை மடிப்பில் சாய்த்துக் கொண்டது. அந்தக் குழந்தையையே பார்த்துக் கொண்டு. அதன் பரட்டைத் தலையைச் செல்லமாகத் தடவி விட்டுக் கொண்டே, காத்தாயி, "எம்மாடி... ரெட்டப் பிள்ள பெத்தவளுவ என்ன பண்ணுவாளுவ..." என்றாள். மீனாட்சி, பதிலுக்கு ஏதோ பேசப்போனாள். மார்பு வலி, அவளோடு பேசாமல், திணறிக் கொண்டிருந்ததால், அவளைப் பார்த்துச் சோகமாகச் சிரித்தாள். விளக்கினாள்: "பாலு இல்ல போலுக்கு... ஒங்க மகன் கடிக்கான்... ஆ... என்னமா வலிக்கு... பொறுத்துக்க மவராசா... வீட்ல போயி சாப்புட்டுட்டு வாரேன்... ராத்திரிக்கு ஒனக்கு நல்லா பாலு கிடைக்கும். ஏன் ராசா அப்டிப் பாக்க...? பாலு இல்லியா... இல்லியா கண்ணு... ராத்திரி வரைக்கும் பொறுத்துக்க மவராசா. சேரில ஒன் சவலப்பாடியும் இப்படித்தான் கடிச்சான்... நம்மள மாதுரி ஏழைக்கு உடம்புகூட துரோவம் பண்ணுதப்பா... பொறுத்துக்கடா... என் மவராசா... என்ன? ராத்திரி வரைக்கும் பொறுக்க முடியாதா... இன்னும் கொஞ்ச நேரத்துல... என் ஆட்டுக்காரரு வந்துடுவாரு... காசு வாங்கி பாலு வாங்கிட்டு வாரேன் கண்ணு..."