பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 97 மேட்டாய் இருந்திருக்கிங்க... இல்லன்னா... நாங்க தைரியமா ஊருக்குப் போக முடியாது." இன்ஸ்பெக்டர் ஆறுதல் கூறினார். "நீங்க தைரியமாய் போங்க... நான் பாத்துக்கிறேன்." கார் பறந்தது. போலீஸ்காரர்கள் ஆண்டியப்பனிடம் வந்தார்கள எடுத்த எடுப்பிலேயே, ஒரு கான்ஸ்டபிள் அவன் கன்னத்தில் அறைந்தார். இன்னொருவர், பிடரியில் அறைந்தார். இன்ஸ்பெக்டர் விறைத்து நின்ற ஆண்டியப்பனைப் பார்த்துச் சீறினார். "நீ என்ன பெரிய ரவுடியாடா... ஊர்ல கொலை செய்யுறதுக்கு குத்தகை வாங்கியிருக்கியா... ஒன் கூட்டாளி கோபால் எங்கடா... சொல்றியா... ஒதை தின்னுறியா..." பிரயாணிகளும், ஹோட்டல்களில் பிரியாணி தின்றவர்களும், நின்ற, அமர்ந்த இடங்களில் இருந்து அசையாமலே, ஆண்டியப்பனைப் பார்க்க, அவனோ முதலில் செய்வதறியாது திகைத்து, பிறகு, சுபாஷ் சந்திரபோஸைப் போல - பாலகங்காதர திலகரைப் போல - பாரதி யாரைப் போல - லெனினைப் போல கண்கள், போலீஸ்காரர்களை சாட்டையடி கொடுப்பது போல, நிமிர்ந்து பார்த்தான். உடம்பில் அடிபட்டாலும் ஆன்மாவில் அடிபடாததுபோல், அவன் கம்பீரமாக கைகளைக் கட்டிக்கொண்டு, விவேகானந்தரைப்போல் நின்றான். நேராக நின்றான். போலிஸ் இன்ஸ்பெக்டர் அதட்டினார். "சொல்லுடா... கழுத... ஒன் கூட்டாளிய எங்கே?... நீ சொல்லாம... ஒன்னை விடப் போறதில்ல. சொல்லுடா..." ஆண்டியப்பன், கம்பீரமாகப் பதில் சொன்னான்: "நான் இந்த நாட்டின் பிரஜை. முதலில்... என்னை 'டா' போடாமல்... மரியாதை கொடுத்துப் பேசுங்க... என்னை... அடிச்சதுக்கு... மன்னிப்புக் கேளுங்க... அப்புறம் மீதி விவகாரத்தைப் பேசலாம்..." இன்ஸ்பெக்டர் அதிர்ந்து போனவர்போல் அவனைப் பார்த்தபோது, கான்ஸ்டபிள் ஒருவர், "இது ஸ்டேஷன்ல கவனிக்க வேண்டிய கேஸ் ஸார்" என்றார். அந்தப் போலீஸ்காரர்கள் நல்லவர்கள். கையில் விலங்கு மாட்டி னால், அவனுக்கு வலிக்கும் என்று நினைத்து, அவன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து. நன்றாக முறுக்கி, அவன் கைகளை பின்புறமாகக் க்ொண்டுவந்து கட்டினார்கள். அப்போது, புறப்படப்போன டவுன் பஸ்சில், அவனை ஏற்றிவிட்டு. அவர்களும் ஏறிக் கொண்டார்கள். பஸ்சில் இருந்தவர்கள். ஒடம்பு. இப்டி இருக்கே. இவனுல்லாம். எதுக்காகத் திருடனும் என்று ஒருவருக்கொருவர் திருட்டுத்தனமாகப் பேசிக் கொண்டார்கள். 2 on.".