பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் Í 03 குழந்தை லேசாக அழுதது. வாயை மேலுங் கீழுமாகக் கொண்டுவந்தது. ஏதாவது கொடு என்பது போல் அவளை ஏக்கத்தோடு பார்த்தது. பால் வார்க்க வேண்டிய குழந்தை, அவளை பாலுக்காகப் பார்த்தது. ஒரு ஒரத்தில் துடித்துக் கொண்டிருந்த மீனாட்சி, குழந்தையை நோக்கி, ஆவேசப்பட்டவளாய், அணு அணுவாக நகர்ந்து வந்தாள். மல்லாக்கப் படுத்துக் கொண்டிே, இரண்டு கால்களையும் கொஞ்சங் கொஞ்சமாக நகர்த்தி, தலையை லேசு லேசாக அசைத்து, முதுகை மெள்ள மெள்ளச் செலுத்தி, குழந்தைக்கருகே நெருங்கினாள். குழந்தையை நெருங்கியதும், லேசாக ஒருக்களித்தவாறு படுத்துக் கொண்டு. ஒரு கையை குழந்தையின் முதுகில் போட்டபோது, கண்ணில் இருந்து, கன்னக்கதுப்பு வழியாக வந்த கண்ணிர், அவள் கழுத்துப் பகுதியில் துளித்துளியாக வந்து தேங்கியது. அந்தப் பிள்ளை-அவள் பெற்ற பிள்ளை, அந்தக் கண்ணிரை, பாலாக நினைத்து. உதடுகளை லேசாகக் குவித்து, குடித்தது. குடித்து முடித்துவிட்டு, இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்பது போல், அவளை ஏக்கத்தோடு பார்த்தபோது மீனாட்சி மார்புப் புண்ணின் வலியை வென்றவள் போல், பாசத்தைத் தின்றவள்போல், கைகள் விறைக்க, கண்கள் புடைக்க, நெற்றி சுருங்க, மூக்கில் மூக்குத்திக்குப் பதிலாக, ஒரு சொட்டுக் கண்ணிர் தங்கம்போல் மினுமினுக்க, வலியால் துடிக்காமல் அசைவற்றுக் கிடந்தாள். 15 ண்டியப்பனின் வீட்டிலிருந்து வெளியே வந்த காத்தாயி, சேரிக்குச் சென்று புருஷன் வந்ததும், புருஷனையும் கூட்டிக்கொண்டு வந்து யாரிடமாவது வண்டி கேட்க வேண்டும் என்று நினைத்தவளாய் நடந்து கொண்டிருந்தாள். கிராமத்திற்கும், சேரிக்கும் இடையே உள்ள "காவல் சாவடி போல் காட்சியளித்த சுடலை மாடசாமியின் பாழடைந்த கோவிலுக்கருகே வந்தபோது, புதிய சாலைகள் போட்டதாக வெறும் மண்ணை அள்ளிப் போட்டு, அவற்றை பாழ்படுத்தும் மாசானம் யூனியன் அலுவலகத்தில் இருந்தோ அல்லது பி.டபிள்யூ.டி அலுவலகத்தில் இருந்தோ எதிரே வந்து கொண்டிருந்தார். காத்தாயியைப் பார்த்ததும், சிரித்துக் கொண்டார். பேச்சில் முந்திக் கொண்டார். "என்ன அம்மாளு. வெயிலுல... வெயிலுல... வேர்க்க விறுவிறுக்க வாற?" "என்ன பண்றது... யாரயும் தூண்டிவிட்டுட்டு. அப்புறம் எதிரிப் பக்கம் சேர்ந்துக்கிட... நான் மேல் ஜாதில பணக்காரியாயிறக்கலிய..."