பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i O 6 ஊருக்குள் ஒரு புரட்சி பிடித்தவனாய், வண்டியில் உட்கார்ந்திருந்தான். பின்னால் குமாரின் தந்தை சின்னத்துரை, நடந்து வந்து கொண்டிருந்தார். எல்லோரும் பதறினார்கள். "என்ன மாமா... என்ன நடந்தது..." "என்ன தாத்தா... என்ன இது?" சின்னத்துரை, ஏதோ சொல்லப் போனபோது, முனியாண்டி, ஹோவென்று கத்திக்கொண்டே வெள்ளைத் துணியை விலக்கினான். இரண்டு ஒலைப்பாய்ச் சுருட்டலில், இரண்டு பினங்கள் சிதைந்து கிடந்தன. வயதுக்கு வந்த இரண்டு மகளையும் மூன்று சின்னப் பையன்களையும், ஒரு செண்டு நிலத்தையும் வைத்திருந்த ஐம்பது வயது நயினார். முகம் சிதைந்து கிடந்தார். ஒரு வருடத்திற்கு முன்புதான் கல்யாணம் ஆன. சேரி வாலிபன் மூக்கையா, காலுக்கும், முகத்துக்கும் இடைப்பட்ட பகுதி, காணமுடியாத அளவுக்குச் சிதைந்து போயிருக்க, கர்ப்பம் தரித்த மனைவியையும், வயதான தாய் தந்தையரையும் பார்க்க நினைத்தவன்போல், கண்கள் துருத்தி நிற்க, ஏதோ பேசப்போகிறவன் போல் வாய் திறந்து நிற்க, விறைத்துக் கிடந்தான். முனியாண்டி, பல்மாக புலம்பிக்கொண்டிருந்த போது, ஒரளவு. அதிர்ச்சி அடைந்திருந்த சின்னத்துரை. விளக்கினார். "முந்தாநாள் நயினாரயும், மூக்கையாவையும், கருப்பட்டி வண்டிய அடிச்சிக்கிட்டு, புனலூரப் பார்த்துப் போகச் சொன்னேனா... நான் பஸ்ல சந்தைக்கு முன்னாலயே போயிட்டேன்... என்னடா வண்டியக் கானுமேன்னு. பழயபடி பஸ் ஏறி வந்தால்... செங்கோட்டய தாண்டி... மலையாள எல்லைக்குள்ள... லாரி மோதி மாடும், இவங்களும் செத்துக்கிடக்காங்க... வண்டிமேல லாரி நிக்குது... அருமயான வண்டி... சுக்கு நூறா சிதறிப் போயிட்டு. கதிர்வேல் பிள்ள வண்டிய அடிச்சிக்கிட்டு வந்த... இந்த முனியாண்டி, பித்துப் பிடிச்சி உட்கார்ந்திருக்கான்..." "அப்புறம்?" "அப்புறம் என்ன... போலீஸ்காரங்க வந்தாங்க... பிரேக் இன்ஸ்பெக்டரு வந்தாரு... ஏதோ கோடு போட்டாங்க... எப்படியோ ஆளுக்குக் கொஞ்சம் கையில தள்ளிட்டு... பிணத்த மீட்டிக்கிட்டு வாரேன்... எய்யா... என் ஒடம்பு எப்டி நடுங்குது... யாராவது ஒரு சோடா வாங்கிட்டு வாங்கடா..." இதற்குள், நயினாரின் மனைவியும். மகளும் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தார்கள். "இந்த வயசில... குளிருல... போlரே'ன்னு நான் பாவி சொன்னதையும் கேக்காம... இப்போ ஒரேயடியாய்ப் போயிட்டிரே... போயிட்டியே என் ராசா..." என்று நயினார் மனைவி, வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள். அவள் மகள். அய்யா.... அய்யா என்று சொல்லிக்கொண்டே ஏங்கியவள். அப்படியே மயங்கி விழுந்தாள். உடனே கடையில் இருந்து, சுக்கை வாங்கி, அங்கேயே ஒரு