பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் # 09 并 கூட்டத்தில் ஒருவர் பேச்சைத் துவக்க நினைத்து "என்ன சின்னான்... ஒன் மச்சான போலீஸ் பிடிச்சி வச்சிருக்காம். ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிப்புடப் போறாங்க... காத்தாயி வேற போயிருக்கா... ராத்திரி நேரம். நீ போயி பாக்கப் படாதா..." என்றார். "ஒண்ணுமில்ல சாமி. தென்காசில... மச்சான் வந்து மேலா புரத்துக்கு மேளத்துக்கு போஆதாயும். அக்காகிட்ட சொல்லிடும்படியும் சொன்னாரு... அவளுக்கு செலவுக்குன்னு... பத்து ரூபா வேற தந்து விட்டாரு..." "ஒரு வேள... அதுக்குப் பிறவு?" "இல்லய்யா... என்னை மச்சான் பஸ் ஸ்டாண்ட்ல வந்து வழியனுப்பு னாரு... அப்போ மணி நாலரை... காத்தாயி... இங்கருந்து போவும் போது... ரெண்டு மணியாம்..." "அப்படின்னா?" "இந்த மாசானம் புரளியக் கிளப்பி விட்டுருக்கான்..." "ஏ... செறுக்கிமவன்... இன்னும் அவனுக்கு குறுக்குசால் விடுறது போகல பாரு... அவன கவனிக்கணும்... ஆனால் இப்போ... நீ போயி... கர்த்தாயியப் போயிப் பாக்காண்டாமா. ராத்திரி நேரம்..." "ரெண்டு பேர அனுப்பி வச்சிருக்கேன்... ஆலங்குளத்துல எங்க பெரியம்மா வீடு இருக்கு... அங்க தங்கிட்டு காலையில வரச் சொல்லி யிருக்கேன்... பெரியம்மா மவனுவள கூட்டிக்கிட்டுதான் போலீஸ் ஸ்டேஷன் போயிருப்பா..." "என்னடா நீ. நீ போறது எப்டி பிறத்தியார் போறது எப்.டி..?" "இப்போ எனக்கு இதவிட... முக்கியமான வேல் இப்பவே இருக்கு... பிச்சாண்டி. போய் நயினாரம்மாவ கூட்டிக் கிட்டு வா... ஆறுமுகம்... பேக்கன்..." "அந்தா... அவளும். பிள்ளியளும் வாரவ பாரு... அவங்கள எதுக்காவப்பா கூப்பிட்ட..." "சொல்லுறேன்." 奪 சொல்லப் போன சின்னான் மேற்கு நோக்கி கூர்மையாகப் பார்த்தான். நயினாரைப் புதைத்துவிட்டு, ஐம்பது அறுபதுபேர் வந்தார்கள். மாசானம், பரமசிவம், சின்னத்துரை, முன்nப், கர்ணம், ஜம்புலிங்கம் முதலிய பிரமுகர்கள் வந்து கொண்டிருந்தபோது, இடும்பன்சாமியும், இன்னும் ஒரு சிலரும் கூட்டத்தில் வந்து சேர்ந்து கொண்டார்கள். நயினார் மனைவி. அருகே இருந்த வண்டிச் சக்கரத்தில் சாய்ந்து 'மவராசா... மவராசா...' என்று புலம்பிக் கொண்டிருக்க, தங்கம்மாவின் அம்மா, அவளுக்கு முந்தானை மடிப்பை வைத்து வீசிக் கொண் டிருந்தாள். தங்கம்மா, முன்னிலும் அதிக மங்கலான பார்வையுடன் முட்டிக் &st 6,58,6556m to பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.