பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0. ஊருக்குள் ஒரு புரட்சி மூக்கையாவின் மனைவியையும், மாமனார் மாமியார்களையும் நான்கைந்து பேர் ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார்கள். வண்டியடித்துக் கொண்டு வந்த முனியாண்டி, தங்கம்மாவிடம் போட்டி போடுபவன்போல், பித்துப் பிடித்து, பைத்தியமாய் ஆகப்போகிறவன் போல் நின்றான். என்னமோ நடக்கப்போவுது என்பதை அனுமானித்து கூட்டம் நின்றபோது, நயினாரைப் புதைத்தவர்கள் அங்கே சங்கமமானார்கள். கதிர்வேல்பிள்ளை "இன்னுமா... கலையல... செத்தவங்ககூட சாவ முடியுமா... போயி... வேலயப் பாருங்கப்பா..." என்று சொன்னபோது, பரமசிவமும், சின்னத்துரையும், சற்று முன்னால் நடந்தார்கள். சின்னான் கத்தினான்: "அங்கேயே நில்லுங்க... ஒங்களத்தான் முதலாளி... ஒரு அடி நகரபபடாது. அங்கேயே நில்லுங்க..." பரமசிவமும், சின்னத்துரையும் அதிர்ந்துபோய் நின்றபோது, சின்னான் அவர்களை வழிமறிப்பது போல் முன்னால் போய் நின்று கொண்டான். "சின்னத்துரை மொதலாளி... நான் ஒம்மகிட்ட சில கேள்வி கேக்கணும்... அய்யா பதில் சொல்லனும்..." சின்னத்துரை வெகுண்டார். "நீ என்னடா கேக்கது... நான் என்ன சொல்றது. வழிய விடுறியா இல்ல..." "மொதலாளி... அப்படிச் சொன்னா எப்டி... நான். நயினாரா மாறி, கேக்கேன்... மூக்கையாவா மாறி கேக்கப் போறேன். இந்த ஜனங்களோட வேலக்காரனா நின்னு கேக்கேன் மொதலாளி... தர்மதுர... கோபப்படாம பதில் சொல்லணும்..." "நடுத்தெருவுல என்னடா கேள்வி?" "ஏன்னா... நடுத்தெருவுல... ரெண்டு குடும்பம் நிக்குது பாருங்க..." சின்னத்துரை சார்பில், பரமசிவம் ஏதோ கோபமாகப் பதில் சொன்னபோது, மாசானம் எப்படிக் கழட்டிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் ஒரு வயதான மனிதர் "அவன் என்ன கேக்கான் என்கிறதத்தான் கேட்டுட்டுப் போங்க" என்றார். சின்னத்துரை தயங்கினார். சின்னான் கேட்டான்: "மொதலாளி... எதிர்த்திசையில வந்த லாரி பார வண்டிமேல அநியாயமா மோதியிருக்கு... போலீஸ்காரங்க வழக்குப் போட்டிருக் காங்களா... நீங்க போலீஸ்ல கம்ளெயிண்ட் எழுதிக் கொடுத்தீங்களா... நஷ்ட ஈடு கேட்டியளா?" சின்னத்துரை சீறினார். "இவரு பெரிய வக்கீலு