பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 6 ஊருக்குள் ஒரு புரட்சி "சரி.. ஆனது ஆச்சு... போனது போச்சு... நேரு சீரா முடிவு பண்ணுங்க..." சின்னான், இறுதியாகப் பேசுகிறவன் போல் பேசினான்: "ஒரு ஏழையோட உடம்பு, பணக்காரனோட உடம்ப விட... அதிக மதிப்புள்ளது. ஏன்னா... பணக்காரன் செத்தாலும். அவன் பணம் குடும்பத்தக் காப்பாற்றும். ஆனால் ஒரு ஏழை... தன் உடம்ப மட்டுமே மூலதனமா வச்சிப் பிழைக்கிறவன்... அவன் செத்தால்... ஒரு குடும்பத் தோட மூலதனமே போயிட்டுதுன்னு அர்த்தம். அதனால இவங்களுக்கு ஒரு வழி பண்ணாம எவனும் நகரமுடியாது... இன்னைக்கு நயினாருக்கும், மூக்கையாவுக்கும் வந்தது. நாளைக்கு இங்கே இருக்கிற யாருக்கு வேணு முன்னாலும் வரலாம்.... யார் பினத்த வேணுமுன்னாலும் விற்கிற நிலைமை வரலாம். இந்த நிலைமை இன்னையோட போகணும்." குமாருக்குக் கோபம் வந்தது. செல்லாக் கோபத்தை பொறுமை யாக்கிக் கொண்டான். மாணிக்கம், மல்லிகாவைப் பார்க்க நேரமாகிறதே என்று தவித்தான். மாசானம், கழட்டமுடியலியே என்று கலங்கினார். ஜம்புலிங்கம், இடும்பன்சாமியை, பயத்தோடு பார்த்தார். சின்னத்துரை, சின்னத்தனம் வெளிப்பட்டதில் நிலைகுலைந்தார் என்றாலும் இவர்கள் எல்லோரையும் விட, அதிகமாகக் கலங்கிப் போனவர் பரமசிவம். அளகேசன் சொன்னதுக்கு, சிலர் தலையாட்டியது வாஸ்தவந்தான். ஆனால் அவங்ககூட ஆட்டவேண்டிய அளவுக்கு ஆட்டலியே. இந்த அளகேசன் கூட இப்போ பேசமாட்டக்கானே... ஒவ்வொரு பயலும் முகத்த எப்படி வச்சிருக்கான்... இந்த சின்னத்துரையால நாமளும் சின்னத் தனமா ஆயிட்டோம். இதுக்கு இந்த சின்னான் பயகூட காரணம் இல்ல... அஸ்திவாரம் போட்டதே இந்த ஆண்டிப்பயதான்... செறுக்கி மவன... விட்டுருப்பாங்களோ... சின்னான் இறுதி எச்சரிக்கை விடுத்தான். "ரெண்டுல ஒண்னு சொல்லுங்க... கொடுக்க முடியாதுன்னாவது சொல்லுங்க..." கதிர்வேல் பிள்ளை, அங்குமிங்கும் கண்களைச் சுழலவிட்டுக் கொண்டே பேசினார்: "சின்னத்துரையும் அப்படிப் பண்ணியிருக்கக் கூடாது. அந்த ரெண்டு குடும்பமும் வாழனும்... சின்னத்துரை. நீ கொஞ்சம் கொடுக்கணும்..." சின்னத்துரை, அழாக்குறையாகக் கேட்டார்: "பணம் எங்கய்யா இருக்கு..." யாரோ ஒரு ஆசாமி. பின்னாலிருந்து குரல் கொடுத்தான். "பிணத்த வித்த காசு இருக்கும்... குமார வித்த பன்னிரெண்டாயிரம் ரூபாய் காசு இருக்கும்..." கதிர்வேல்பிள்ளை, சின்னானின் கைகளைப் பிடித்துக் கொண் LItsf. "சின்னான்... நான் சொல்றதக் கேளு. குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொல்லுதேன்... வாங்கிக் கொடு ராஜா..."