பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 1 1 7 பின்னாலிருந்து சில குரல்கள்: "ஆமாம்பா... பிள்ள, பொதுப்பிள்ள... நாமும் விட்டுக் கொடுக்கணும் கொஞ்சம்... அவங்கதான் புத்தி கெட்டதனமா..." இன்னொரு பின்குரல்: "எவன்யில... புத்தி கெட்டதனமாப் பேசுறது... ஒப்பன் செத்திருந்தா இப்போ இப்டி பேசுவியால..." சின்னான், சிறிது யோசித்துவிட்டுச் சொன்னான். "சரி ஒங்க முகத்துக்காவ வாங்கிக்கிறோம். ஆனால், இது அட்வான்ஸ்தான்... ஆனால் ஒரு கண்டிஷன். லாரிக்காரன் மேல வழக்குப் போடணும். நஷ்ட ஈட்டை ரெண்டு குடும்பத்துக்கும் கொடுத்துடனும்... வழக்குக்கு ஆகுஞ் செலவ... எவ்வளவு ஆனாலும் சின்னத்துரை ஒத்துக்கணும்... ஒருவேள... இவரு... அங்க பண்ணிட்டு வந்த கோளாறுல... வழக்குத் தோத்துட்டா... தோக்காது... சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன்... தோத்துட்டா.... இவரு குடும்பத்துக்கு... மூவாயிரம் வீதமாவது கொடுக்கணும்... சம்மதமான்னு கேட்டுச் சொல்லும்..." "என்ன சின்னத்துரை சொல்லுத..." சின்னத்துரை தயங்கியபோது, குமார் அவருக்கு மட்டும் தெரியும்படி கண்ணடித்தான். சின்னத்துரை தலையாட்டிவிட்டு, பைக்குள்ள இருந்த ஆயிரம் ரூபாயை சின்னானிடம் நீட்டிவிட்டு, "மீதிய நாளைக்கி தாரேன்... நம்பிக்க இருக்கா..." என்றபோது, சின்னான் "இப்பவே, ஒரு அக்ரிமெண்ட் எழுதி கையெழுத்துப் போடுவோம்" என்றான். இதற்குள் ஒரு சிலர், "அக்ரிமெண்ட் எதுக்கு... கொடுத்த வாக்க மீறிட்டு... அந்த ஆளு ஊர்ல லாந்திடுவாரா..." என்றார்கள். சின்னான், தான் சொன்னதை வற்புறுத்தவில்லை. பரமசிவம் வகையறாக்கள் போய்விட்டார்கள். திரும்பிப் பார்த்துக்கொண்டு போன மாசானத்தை, பிச்சாண்டி போய், அவர் சட்டையைப் பிடித்துக் கொண்டு "ஏய் மாசானம், பொறளிய கிளப்பி விட்டுட்டு... போறியாக்கும்... யாரு லாக்கப்புல இருந்தது? வந்து சொல்லிட்டுப் போ" என்று சொல்லி, பிடரியில் இரண்டு போட்டபோது, பரமசிவம் வகையறாக்கள் பொறி கலங்கி நின்றபோது. கூட்டத்தில் ஒரு சிலர் "கெடுவான்... கேடு நினைப்பான். விடு, அவனும் லாக்கப்புக்கு போற காலம் வரும். விடு" என்றார்கள். பிச்சாண்டி விட்டு விட்டான். மாசானம் பிய்த்துக் கொண்டார். அடிபட்டதைவிட, வலித்ததே அவருக்குப் பெரிய அவமானமாக இருந்தது. 'நான்... கேள்விப்பட்டதத்தான்... சொன்னேன்... அதுல என்ன தப்பு...' என்று மாசானம் சொல்ல நினைத்தார். கூட்டம் நம்பாது என்று உள்ளுணர்வு உணர்த்தியதை நம்பினார். உடம்பைத் தூக்கிக்கொண்டு ஓடினார். கூட்டம் போகப் பார்த்தது. கிணறு வெட்டும்போது கையொடிந் தவர்கள், பார வண்டியில் காலொடிந்தவர்கள், சின்னானைச் சூழ்ந்து