பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

ஊருக்குள் ஒரு புரட்சி


பாடங்களிலும் பஸ்டில் வந்து பணத்தில் 'லாஸ்டாக வந்ததால், மேற்கொண்டு படிக்க முடியாமல்போன ஆண்டியப்பன்.


அவன் படிக்காதவன் என்பதை, அந்தக் கூட்டத்தில் அடையாளம் கண்டு கொள்ளலாம். அவ்வளவு கட்டுமஸ்தான உடல். கபடமில்லாத கண்கள். எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு அவற்றைத் தனக்குள்ளேயே ஆராய்ச்சி செய்து கொள்ளும் தனித்தோரணை. இளைஞர் மன்ற நிர்வாகத்தின் தலைவனும் பட்டதாரியும். பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவத்தின் எதிரியுமான ஒரு பண்ணையாரின் மகன் குமார். இன்னொரு பண்ணையாரின் மகனும், மன்றத்தின் பொதுச் செயலாளருமான, மாணிக்கம் பி.ஏ.,பி.டி விழாவில் பேசப்போகிற மன்றத் தலைவன் குமாருக்கு, உபதேசம் செய்து கொண்டிருந்தான்.

"இந்தா பாருடா... இளைஞர்கள் சார்பில், உன்னைப் பேசவிடாவிட்டால் கறுப்புக் கொடி பிடிக்கப் போறதாய் வாதாடி, உன் பேரை போஸ்டர்ல போட முடியாவிட்டாலும் நிகழ்ச்சி நிரலுல போட வச்சுட்டோம். ஊர்ல நடக்கிற அட்டூழியங்களை, அமைச்சர் முன்னாலே அம்பலப்படுத்த வேண்டியது உன்னோட பொறுப்பு."


"போஸ்டர்ல பேரு போடாதபோது எப்படிப் பேசலாமுன்னு யோசிக்கேன்." "எவண்டா இவன்? போஸ்டர்ல மற்றும் பலர்’னு ஒரு வாசகம் இருக்கது எதுக்காக? உனக்காகத்தான். உனக்காவாத்தான். இப்போ அது பிரச்சினை இல்ல. நம் ஊர்ல நடக்குற அக்கிரமத்த நீ பிச்சிப் பிச்சி வைக்கணும். பின்னிப் பின்னி எடுத்துடனும். அரசாங்கம் சிறு விவசாயிகளுக்கு நாலுல ஒரு பங்கு உதவித் தொகையும், மிகச் சிறு விவசாயிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு உதவித் தொகையும் கொடுத்து, கறவை மாடுகள், தழைமிதிக் கருவிகள் முதலிய முக்கியமானதை, பாங்க் கடன்கள் மூலம் வாங்கிக் கொடுக்கிற திட்டந்தான் சிறு விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம். ஆனால் நடந்தது என்ன?"


"...பண்ணையார்கள். இவங்க பேர்ல மாடுகளை வாங்கி தாங்களே வச்சிக்கிடுறாங்க. பினாமி நிலங்களை வச்சிருக்கிற இவங்க, வேலைக்காரர்களையும் பினாமி விவசாயிகளாக்கி, அவங்க பேர்லயும் வாங்கிக்கிறாங்க... அப்புறம் கூட்டுறவு சங்கத்துல, குறிப்பிட்ட ஒரு பங்காளிக் கூட்டந்தான் சேர்ந்திருக்கே தவிர, மற்றவங்கள சேர்க்கல. சேர்க்கவும் முடியல. கூட்டுறவுத் தலைவர் கமிஷன் வாங்குறார். கர்ணம் புறம்போக்கு நிலத்தை மடக்கிப் போட்டிருக்கார். இங்க இருக்கிற இந்தத் தனியார் பள்ளிக்கூடத்துக்கு. பிள்ளைகளுக்காக பால் பவுடர், டின் டின்னா வருது. இது பிள்ளிங்களுக்கே தெரியாது. பால் டின்னைக் கொண்டு மானேஜர் மகளும், மருமகளும், கிணற்றுக்கு தண்ணி எடுக்க வரும்போது தான், இந்த சமாச்சாரமே வெளில தெரியுது. அதோட, இந்த