பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம்

11


மானேஜர். பால்பவுடர விற்கிறதோட, வாத்தியாருங்க சம்பளத்துலயும் கிம்பளம் எடுத்துக்கிட்டு. பொம்புள பொறுக்கியா அலையுறான். இவன் மச்சான் போஸ்ட்டு மாஸ்டர். வேண்டாதவங்களுக்கு வருகிற லட்டர கிழிச்சிப் போட்டுடுறான். எனக்கு வந்த இன்டர்வியூ கார்டை, அவன் தராததை, நீ சுட்டிக்காட்டி நம் கிராமத்திலேயே அறிவாளியும் ஆற்றல் மிக்கவனுமான மாணிக்கம் பி.ஏ.,பி.டிக்கே, இந்த கதியென்றால், யாருக்கு வராது"ன்னு சொல்லு. புரியுதா... அப்புறம் மாதர் சங்கத்துக்குக் கொடுத்த தையல் மிஷின்கள். பஞ்சாயத்துத் தலைவர் வீட்லயும், முன்ப்ே வீட்லயும் கிடக்குது. ஒரு மிஷின், தலைவரோட மகளுக்கு. சீதனமாப் போயிட்டுதாம். புரியுதா...?"

இப்போது, மன்றத்தின் துணைத் தலைவரும், என்ஜினியரிங் படிப் பில் டிப்ளமா படித்தவனுமான கோபால், தன் பங்குக்குப் பேசினான்.


"அப்புறம்... பஞ்சாயத்துத் தலைவர், செக் போட்டு யூனியனில் பணம் வாங்குறார். ரோட்ல மண்ண அள்ளிப் போட்டுட்டு, பாலங் கட்டுனதா ரிக்கார்ட் பண்னுதார். நீ எதைச் சொல்ல மறந்தாலும், ஒண்ணே ஒண்ணை மட்டும் சொல்ல மறந்துடாத... அதாவது, சர்க்காருடைய சலுகைகளை, அயோக்கியங்கதான் பயன்படுத்திக் கிறாங்க. சேர வேண்டியவங்களுக்குச் சேரல... சேரவே இல்லை. இதை நீ.சொல்லாம விட்டால், நான் ஒன்னை உதைக்காமல் விடமாட்டேன்."

அந்தச் சமயத்தில் அங்கே வந்தார் மாசானம். காண்டிராக்ட் எடுத்து புதுப்பணக்காரராய் ஆனவர். பழைய பணக்காரர்கள். தன்னை புது மனிதனாக அங்கீகரிக்காமல். பழைய கருவாட்டு வியாபாரியாகவே தன்னை இன்னும் நினைப்பது கண்டு, எரிச்சல் கொண்டவர். காண்டிராக்ட் வித்தையை காட்டிப் பேசினார்...


"நீங்க சும்மா இருங்கப்பா... நம்ம குமார் வெளுத்து வாங்கப் போறான். இன்னையோட இந்த ஊரப் பிடிச்ச சனி விலகப் போவுது. குமார். பாயிண்ட் பாயிண்டாய் எழுதி வச்சுக்க... எங்க கல்லப் போடணும்... எங்க மண்ணப் போடணும்... யார் தலையில... எதப் போடணுமுன்னு நல்லா குறிச்சு வச்சுக்க...!"

கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் எப்போதாவது ஆறுதல் பரிசு பெறும் குமார். அவர்களைப் பார்த்து "நான் பேசினதுக்கு அப்புறம் பஞ்சாயத்துத் தலைவர் தூக்குப் போட்டுச் சாகணும். மாதர் சங்கத் தலைவி, வீட்டுக்கு வெளிலேயே வரமாட்டாள்... வேணுமுன்னாப் பாருங்க..." என்றான். அவர்கள் பார்த்தார்களோ இல்லையோ, விழா மேடையில், விவசாயக் கருவிகளையும், தையல் மிஷின்களையும், கிராமநல ஊழியர்களின் உதவியோடு, ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம். அவர்களையே பார்த்தார். மாசானம்... அடே... கருவாட்டு