பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

ஊருக்குள் ஒரு புரட்சி



யாபாரி... ஒன்னோட வேலயா... நீதுண்டி விடுறியா... பார்க்கலாமாடா... பாத்துப்புடலாம்...' என்றாலும், தலைவருக்கு உள்ளூர நடுக்கந்தான்.

இவர் மட்டும், அந்த இளைஞர் கூட்டத்தைப் பார்க்கவில்லை. மாதர் சங்கத் தலைவி சரோஜாவின் மகள் மல்லிகா, அங்கே நின்ற மாணிக்கம் பி.ஏ., பி.டி.யையே பார்த்துக் கொண்டே நின்றாள். சீ... என் ஏக்கம் இவருக்கு ஏன் புரிய மாட்டக்கு. அந்தத் தடிப்பயல்களும் அவரை விட மாட்டக்காங்க... எப்படி கையை ஆட்டி ஆட்டிப் பேசுறார் என்கிட்ட இப்படிப் பேசினால் என்னவாம்...


மல்லிகா மட்டுமா பர்த்தாள்? இல்லை. விவசாயக் கூலிப் பெண்ணான தங்கம்மா, தன் அய்யா கூடப் பிறந்த அத்தை மகனான ஆண்டியப்பனை அப்படியே பார்த்தாள். ஒரு தடவயாவது என்னைப் பார்க்குறாரா... பவுசு... பசுமாட்டை, மந்திரி கையால வாங்கப் போற பவுரு. வரட்டும். அய்யாவைப் பாக்குறச் சாக்குல... என்னப் பாக்க வராமலா போவாரு... அப்போ... நானும் பார்க்காமலும் பேசாமலும் இருக்கேன்...


இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைப் பார்த்துக் கொண் டிருந்தபோது, டுட்டியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பனும், பஞ்சாயத்துத் தலைவரையே பார்த்தார். இந்தத் தலைவர் ஸ்டேஷனுக்கு வந்து கள்ளச் சாராயம் குடித்த அப்பாவி ஏழைபாளைகளை விடச் சொல்லும்போது, இவரும் பிழைச்சிப் போவட்டுமே, ஏழை ஜனங்கள் என்று நினைத்து விட்டிருக்கிறார்.


ஆனால் இப்படி உதவியதே தப்பாப்போயிற்று. ஒரு தடவை. ஒன்றும் அறியாத ஒரு ஏழையை, குடித்ததாய் வழக்குப் போடும்படி சொன்ன போது, அவரை கெட்அவுட் என்று சொல்லி விட்டார். பஞ்சாயத்து பரமசிவமோ ஒன்ன மாத்தாட்டால், என் பேரு மாறிப்போயிடும் என்று சவாலிட்டார். உடனே இதை சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டரிடம் நடந்ததைச் சொன்னால், அவரோ, எந்த இந்திரன் பதவிக்கு வந்தாலும். இந்த ஏரியாவுக்கு இந்திரன் இந்த பரமசிவம், பார்த்து நடந்துக்கையா என்று சொல்லிவிட்டார். தங்கப்பன். இப்போது நிஜ மாகவே பயந்து விட்டார். அமைச்சரிடம் சொல்லி, ஆசாமி, தண்ணி இல் லாத காட்டுக்கு மாற்றிடுவானோ?- எதுக்கும் ஒரு சல்யூட் அடிக்கலாம்.


இந்த அமர்க்களம் பத்தாது என்பதுபோல், சேரியில் இருந்து சின்னான், தலைவிரி கோலமாக ஓடிவந்தான். பட்டதாரி வாலிபன். 'டவுனில் சர்க்கார் உத்தியோகம். இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி களைத் தாண்டிக்கொண்டே, விழாமேடைக்கருகே வந்து, அங்கே உட்கார்ந்திருந்த ஹரிஜன சிறுவர், சிறுமிகளை கைகளைப் பிடித்துத் துக்கி நிறுத்தி, வாங்கல... நமக்கு துணிமணிகள் கொடுக்கிறவங்க...