பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம்

13


சேரில வந்து கொடுக்கட்டும் என்று சொல்லி அவர்களை விரட்டிப் பிடித்து இழுத்துக் கொண்டே போனான்.

சின்னான், சேரிப்பயல்களோடும், சிறுமிகளோடும், அடுத்த மாசச் சம்பளத்துல ஒங்களுக்கு டவுசராம்... பாவாடையாம்...' என்று தாஜா செய்து கொண்டே, இளைஞர் மன்ற நிர்வாகிகளைக் கடந்தபோது, சின்னானின் கல்லூரித்தோழன் மாணிக்கம், மல்லிகாவை இம்ப்ரஸ் செய்ய நினைத்தவன்போல், "என்ன சின்னான்... ஊர்ப் பிரச்சினை களை தீர்க்கிறதில், எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டிய நீயே இப்படிப் பண்ணலாமா?" என்றான்.

சின்னான், அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, வார்த்தைகளை ஏற்றி இறக்கிப் பேசினான்.

"அன்னக்கிளி சினிமாவுல ஒரு காட்சி இப்போ ஞாபகம் வருது. கல்யாணமான காதலனும் அன்னக்கிளியும், மனம் உருகப் பேசிக்கிட்டு இருக்காங்க... இரண்டு பேரும் அழுகிறாங்க ரசிகர்களும் அழுகிறாங்க. அதே சமயம் அன்னக்கிளி போட்ட நெருப்புல... மீனுங்க துள்ளி விழுநது சாகுது. துடியாய் துடிக்குது. இதை யாருமே பார்க்கல...பாாக்க விரும்பல. இதுமாதிரி தான் உங்க பிரச்னை அன்னக்கிளி பிரச்னை."

"... ஆனால் சேரி ஜனங்களோட பிரச்சினை... அந்த நெருப்புல துள்ளி விழுந்து துடிக்கிற மீன்களை மாதுரியான பிரச்சினை..."

மாணிக்கம் இடைமறித்தான்.

"நீ எங்கள. தப்பா நினைக்கிற சின்னான். ஒன்னை நாங்க... எப்போதாவது ஹரிஜனாய் நினைச்சுப் பழகுறோமா... ஒன் வீட்லகூட ஒரு தடவை... காபி சாப்பிட்டிருக்கேன்" என்றான்.


சின்னான், தன் தோளில் கிடந்த மாணிக்கத்தின் கையை, கீழே எடுத்துப் போட்டுக்கொண்டே "ஹரிஜனாய் இருந்தாலும், அப்படி நினைத்துப் பழகக் கூடாதுன்னு புடித்தவர்களுக்கு ஒரு எண்ணம் வருது பாருங்க... அதுதான். பழைய காலத்து ஆட்கள் எங்கள ஜாதிப்பேரச் சொல்லி கூப்புடுறதைவிட மோசமான சங்கதி. நாம சமத்துவமாய் பழகுறோம் என்கிறதுல பெருமை தேடுற அகம்பாவ உணர்வின் பூர்ததி. என் வீட்ல காபி சாப்பிட்டதே ஒரு நியூஸா இருக்குது பாருங்க... என்னைப் பார்த்ததும் ஹரிஜன் என்கிற ஒரு எண்ணம் வருது பாருங்க... இந்த இரண்டும் இருக்குற வரைக்கும், நீங்களும் உருப்படப் போறதில்ல, நாங்களும் உருப்படப் போறதில்லை. சரி... நான் வாரேன்."


சின்னான் போய்விட்டான். எல்லோரும் வெளிப்படையாக, அவன் ஜாதியைப பேசி, திட்டிக் கொண்டிருந்தபோது, ஆண்டியப்பன் மட்டும், சின்னான் போவதையே பார்த்துக்கொண்டு நின்றான். எட்டாவது வகுப்பு படிப்பது வரைக்கும், தன்னோடு உடலுரச உட்கார்ந்து, காதுரசப் பேசி, கையுரச நடந்த இந்த சின்னான். இப்போது தன்னைப் பார்த்து,