பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஊருக்குள் ஒரு புரட்சி


இருக்கியா செத்தியா என்றுகூடக் கேட்காமல் போறதற்காக, மனத்திற்குள் மருகினான்.


"இப்படியே விட்டால் தப்பு என்று எண்ணி, அங்கே பஞ்சாயத்து பரமசிவம் வந்து "ஏண்டா குமார்... நீ செய்யுறது நியாயமாடா... இந்தக் கிழவனே எல்லாத்தையும் கவனிச்சிக்கிடட்டுமுன்னு இங்க நின்னா எப்டிடா... வாடா... ஏல ஆண்டி... ஒனக்கும் தனியா வெத்துல பாக்கு வச்சி அழைக்கனுமாக்கும். போய் பெஞ்சில உட்காருல... மந்திரி தார மாட்ட வாங்குல..." என்றார்.


குமாரும். ஆண்டியப்பனும், பஞ்சாயத்துத் தலைவருடன் மேடையை நோக்கிப் போனார்கள். தலைவர் வந்த போது, கழட்டிக்கொண்ட புதுப் பணக்காரர் மாசானம் அப்போது காதுகேட்கும் துரத்திற்கு தன்னைக் கடத்திக் கொண்டவர், இப்போது மீண்டும் அங்கே வந்து, இளைஞர்களின் காதுகளுக்குள் கிசு கிசுத்தார்:


"இந்த பரமசிவம்... பண்ணுத பாத்தியளா.. மனுஷன் குமார எப்படி குளிப்பாட்டுதான் பாத்தியளா... இவன் நனைஞ்சுட மாட்டானே?"


இதற்குள், அமளிகளும் கிசுகிசுப் பேச்சுக்களும் அடங்கின. வான வேடிக்கைகள் வெடித்தன. மேளங்கள் முழங்கின. அமைச்சர் வந்து மேடையில் அமர்ந்தார். குமார், அவர் பக்கத்தில் உட்கார்ந்தான். கல்லூரிக் காலத்தில் அறிமுகமான அந்த அமைச்சரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். இதுவரை, அவன் இருப்பதையே ஒரு பொருட்டாகக் கருதாத மாவட்ட அதிகாரிகள், இப்போது குமாரை சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள்.


நீராருங் கடலுடுத்த பாட்டை, ஒருத்தி கட்டைக் குரலில் பாடினாள். அதே பாட்டை. அந்தப் பள்ளியின் சங்கீத ஆசிரியை மங்களத்தைப் பாடச் சொல்லியிருந்தால், மங்களகரமாகப் பாடி இருப்பாள். அந்த ஏழை ஆசிரியைக்குப் பதிலாக, மாதர் சங்கத் தலைவியின் சித்தி மகள் பாடினாள். தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூட இன்புளுயன்ஸ் இல்லாத 'இன்புளுயன்ஸா நோய்க்காரி மங்களம், பாட்டைக் கேட்டும் பாடியவளைப் பார்த்தும் கொஞ்சம் சங்கடப்பட்டாள்.


பாட்டு முடிந்ததும், பஞ்சாயத்துத் தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார். அமைச்சர் உட்பட அத்தனை பேரையும் பதவிக்கும். தகுதிக்கும் ஏற்றபடி அறிமுகப்படுத்திவிட்டு, இறுதியில் குமாரைப் பற்றிப் பேசும்போது "இந்த குமார், இந்த ஊரின் தவக்குமார். வேலைக்குப் போகாமல், சேவைக்காக, தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன். இவன் இல்லையானால், ஊர் ஊராக இருக்காது. வருகிற பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில், நான் நிற்கப் போவதில்லை. இவனைத்தான் நிறுத்தப் போகிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றாா. உடனே மக்கள் கைதட்டினார்களோ, என்னவோ, மாவட்ட