பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ஊருக்குள் ஒரு புரட்சி அவார்ட் கிடைக்கப் போகிற திருப்தியுடனும், நெளிந்து கொண்டிருந்த போது, கோணச்சத்திரத்துல டி சாப்புடுறியாடா என்று ஆண்டியைக் கேட்ட ஹெட் கான்ஸ்டபிள் அங்கே தோன்றினார். ஆண்டியைப் பார்த்து விட்டு " என்ன... ஆண்டி... இன்னும் வம்பு தும்ப விடலியா..." என்றார். "இனுமேத்தான் ஆரம்பிக்கப் போறேன்... நீங்க எப்படி... இங்க வந்திய?" "ஒன்னை லாக்கப்புல இருந்து விட்ட மறுநாளே... எனக்கு அனலிஸ் டெண்ட் சப்-இன்ஸ்பெக்டரா புரமோஷன் வந்துட்டு. இங்கதான் டுட்டி..." "அப்படின்னா... நான் கைராசிக்காரன்னு சொல்லுங்க... எனக்கும் புரமோஷன் வந்துட்டு... முன்னால பட்டிக்காட்டு டவுனுல லாக்கப்பு. இப்போ... ஜில்லா தலைநகர்லேயே லாக்கப் கிடச்சிருக்கு... சீக்கிரமா மெட்ராசுக்கும் புரமோஷன் வந்துடும்... இல்லியா லார்..." முன்னாளைய ஹெட் கான்ஸ்டபிளும், இன்னாளைய அலிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டரும் அவனை அதிர்ந்து பார்த்தார். வன்முறையாளன் பிறக்கவில்லை; உருவாக்கப்படுகிறான். அன்றிரவு, எல்லோருக்கும் இட்லி வடை கொடுக்கப்பட்டது. ஆண்டியப்பன், தனக்குக் கொடுக்கப்பட்டதை வாங்க மறுத்தான். அஸிஸ்டெண்ட் எஸ்.ஐ எவ்வளவோ சொல்லிப் பார்ததார். லாக்கப் வாசிகள். தங்களுடைய இட்லி, வடைகளைக்கூட, அவன் வாயில் ஊட்டினார்கள். ஆண்டி, உதடுகளைக் குவித்துக் கொண்டான்: "என்னை எதுக்காக அடிச்சாங்கன்னு தெரியுமுன்னால, இனிமேல் நான் சாப்பிடப் போறதில்ல" என்று ஆண்டி, அந்தப் பெயருக்கில்லாத தோரணையுடன் சொல்லிவிட்டான். போலீஸ்காரர்கள் உட்பட எல்லோருமே, வாயடைத்துப் போனார்கள். மறுநாள் காலையிலும், அவன் டீ குடிக்க மறுத்து விட்டான். எட்டு மணிக்கு வந்த இன்ஸ்பெக்டரிடம், விவகாரம் சொல்லப்பட்டது. அவர் உள்ளூர அதிர்ந்தாலும். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், "எத்தனை நாளைக்கு இருக்கான்னு பார்ப்போம். இவனை... இப்போ அடக்காட்டால் எப்பவும் அடக்க முடியாது. பயங்கரவாதியாய் மாறுற அறிகுறி முகத்துல நல்லா தெரியுது" என்று போலீஸ்காரர்களிடம் சொல்லிவிட்டு. எங்கேயோ புறப்படப் போனார். குறுக்கே, மாட்டுவிவகாரத்தை விசாரணை செய்த மாவட்ட அதிகாரி ஒடி வந்தார். இதே இந்த இன்ஸ்பெக்டரின் அந்தஸ்துள்ள அதிகாரி அவர். இருவரும் ஒரே அந்தஸ்தில் இருந்ததால், யார் யாருக்கு முதலில் 'விஷ்' செய்வது என்ற சீனியாரிட்டிப் பிரச்சினை உள்ளத்தின் ஈகோவாக பல பொது நிகழ்ச்சிகளில் ஒருவரை ஒருவர் கண்டுக்காமல் இருந் திருக்கிறார்கள். இப்போது, விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டரை. கண்டுக்க வந்து விட்டார். காலில் விழாத குறையாகக் கேட்டார்: