பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 121 இதற்குள் இன்னும் கோபம் தீராமல் இருப்பதுபோல் தோன்றிய போலீஸ்காரரை, தாஜா செய்யும் நோக்கத்தோடோ என்னவோ, கோப்பைத் துண்டுகளைப் பொறுக்கிய ஆசாமி "போங்க சார். ஒரு அஞ்சு நிமிடம் லேட்டா வந்திருந்தா... நான் சைக்கிள... மேட்டுப்பாளையத்துல வித்துருப்பேன்... நானும் எத்தனையோ போலீஸ்காரங்கள பாத்திருக்கேன். ஆனால் ஒங்கள மாதுரி கண்குத்தி பாம்ப பாக்கல சார்... நீங்க இங்க இருக்கது வரைக்கும்... எங்க தொழிலு உருப்படாது சார்... சைக்கிள அக்குவேறு. ஆணிவேறு ஆக்குமுன்னால... நீங்க எங்கள அப்டி ஆக்கிடுவிய... இல்லியா மச்சான்... சொல்லுடே..." போலீஸ்காரர். தன் தோள்பட்டை நம்பரை பெருமையோடு பார்த்தபோது, இதுவரை எதுவும் பேசாமல் இருந்த ஆண்டியப்பன் குரல் வெடியாக, குரல்வளையே துப்பாக்கியாக, வாய்வழியாக வார்த்தை ரவைகளை குறி பார்த்துப் போட்டான்: "நீங்கல்லாம் மனுஷங்களா... புண்ணாக்குப் பயலுவளா... ஏழைன்னு தெரிஞ்சதும், காரணமில்லாமலே, எப்டி வேணுமுன்னாலும் அடிக்கலாமுன்னு ஆயிப்போன காலத்துல... நாம காரணத்தக் கொடுக்கலாமா... நம்மள மாதுரி ஒருசில ஏழைங்க... சைக்கிள் திருடுறதுனால... பணக்காரங்க கள்ளப் பணத்துல கார் வாங்கி ஒட்டுறது தெரியாமப் போவுது... நாம கோழி திருடுறதுனால... அவங்க... தேசத்தையே பட்டப் பகலுல கொள்ளை யடிக்கது யார் கண்ணுக்கும் தெரிய மாட்டக்கு. நாம... லாக்கப்பையே வீடா நினைக்கதுனால. நம்ம. குடும்பம் வீட்டையே லாக்கப்பா நினைக்குது... நாமும் மனுஷங்கப்பா... நம்மளயும் எவனும் நீ நான்னு பேசுறதுக்கு உரிமை கிடையாது... நாம அந்த உரிமையை கொடுக்கப்படாது. ஒங்களால... ஏழை எளியவங்க எல்லோருக்குமே கெட்ட பேரு... சைக்கிள் கடத்துறதுல காட்டுற சாமர்த்தியத்த. உன் ஊர்லயே மோசடி பண்ணுறவங்கள... கடத்துறதுல காண்பிக்கணும். கத்தரி வச்சு. பாக்கெட்ட வெட்டுறதுல இருக்கிற திறமையை... ஏழபாளைகளோட வயித்துல அடிக்கிறவனோட வயிற கிழிக்கிறதுல காட்டணும். அநியாயக் காரங்கள எதிர்க்கிறதுல இருக்கிற திருப்தி வேற எதுலயும் இருக்க முடியாது... இன்னைக்கி நாட்ல நடக்கிற அநியாயத்துக்கு நாமளும் கிாரணம். நம்மளோட சின்னச் சின்ன தப்பால... பணக்காரங்களோட பெரிய பெரிய தப்புங்க... மறையுது மறைக்கப்படுது..." போலீஸ்காரர். ஆண்டியை அதிர்ச்சியுடன் பார்த்தார். இவன் நக்ஸ் லைட்டாக இருப்பானோ? தெலிங்கானாவில் இருந்து... தமிழ் நாட்டுக்கு தலைமறைவா வந்திருக்கானாமே சுப்பாராவ். அந்த ராவா இருக்குமோ...? இன்ஸ்பெக்டர் வந்ததும் தனது சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுபோல், அவர் பயத்துடனும், ஏதோ ஒரு