பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ஊருக்குள் ஒரு புரட்சி போலீஸ்காரர்களும் புரிந்துகொண்டார்கள். அடிக்கிறபடி அடித்து. உதைக்கிறபடி உதைத்து, குத்துகிறபடி குத்தினால் திருடாதவன்கூட 'அய்யோசாமி. நான் திருடுனது வாஸ்தவந்தான். அடிக்காதிங்க... சொல்லுதேன்' என்று சொல்லிவிடுவான். ஆனால் இவனை வாயில் ரத்தங்கொட்டும்படி குத்தியும். லத்திக் கம்புகளில் ரத்தத்துளிகள் படும்படி முதுகில் அடித்தும். முடியை இழுத்தும், முன் நெற்றியை சுவரிலே மோத வைத்தும், கால்கள் இரண்டையும் நீட்டவைத்து அவற்றின்மேல், ரூல்தடியை, பலங்கொண்ட மட்டும் அழுத்தியும். தாக்குதலுக்கு முன்னாலும், பின்னாலும், "சொல்லுடா... ஒன் கூட்டாளி கோபால் கள்ளக்கடத்தல் செய்யுறத சொல்லு, ஒன்ன விட்டுடுறோம். இல்லன்னா... ஊமைக்காயத்தாலயே சாவப்போற..." என்று அதட்டியபோதும், அவன் ஊமை போலவே, உதடுகளைக் கடித்துக்கொண்டு ஒன்றும் பேசவில்லை. அவனை அடித்த களைப்புத் தீர, டி குடித்த போலீஸ்காரர்கள் அவனுக்கும் 'டி' வாங்கிக் கொடுத்தார்கள். ஆண்டியப்பன், ‘டி’ கோப்பையை, பணிவாக வாங்கிக் கொள்வதுபோல் வாங்கி, பிறகு, அதை வெளியே வீசியெறிந்தான். அந்தக் கோப்பையை, பரமசிவமாக, குமாராக, மாணிக்கமாக, மாசானமாக நினைத்துக் கொண்டு, வலது கையை உயர்த்தி. கோப்பையைத் தூக்கி, பின்பு அதை போலீஸ் சின்னமாக நினத்துக்கொண்டு. அது சின்னாபின்னமாகும்படி வீசியெறிந்தான். அவன் அப்படி வீசும்போது, அந்த லாக்கப் அறைக்குள்ளே குடித்தனம் நடத்துவதுபோல் தோன்றிய இரண்டு வாலிபர்களும், ஒரு நடுத்தரத் துண்டு மீசைக்காரரும், அவனைப் பிடித்துக் கொண்டார்கள். போலீஸ்காரர்கள் அடித்துவிடக்கூடாதே என்பதுபோல், அவனை மறைத்துக் கொண்டார்கள். ஒரு லாக்கப் வாசி, அவனை தனது சகலையாக நினைத்து உரிமையுடன் அதட்டினார்: "அவங்க ஆசையோட வாங்கிக் கொடுக்கிறத... இப்படி எறியலா மாடா... இத. அவங்களயே தூக்கி எறியுறது மாதுரி. அவங்க ஒன்ன வீசுனா கேக்குறதுக்கு யார் இருக்காங்க விடுங்க சார்... முட்டாப் பயல்... அனுபவம் இல்லாத பயல்... அடுத்த தடவ வரும்போது இப்படிப் பண்ணமாட்டான்..." ஆண்டியப்பன். கோபமாக எழுந்து, படுகோபமாக உட்கார்ந்த போலீஸ்காரரைப் பார்த்தான். சக லாக்கப் வாசிகளை, கொட்டக் கொட்டப் பார்த்தான். ஒருவன் சிதறிய கோப்பைத் துண்டுகளை. பொறுக்கிக் கொண்டிருந்தான். இன்னொருவன். அங்குமிங்குமாகப் பரவிய தேநீர்த் துளிகளை கால்களால் தேய்த்துவிட்டுக் கொண் டிருந்தான். அவர்களைப் பார்க்கப் பார்க்க, ஆண்டியப்பனுக்கு அனுதாபமாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்தது.