பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 1 19 சின்னான், ஆசாரிப் பையனின் சைக்கிளில் ஏறிக் கொண்டான். "விடப்படாது... என்ன ஆனாலுஞ்சரி..." என்றது கூட்டத்தில் பல குரல்கள். தங்கம்மா, சின்னானை அர்த்தத்தோடு பார்த்தாள். நான் பழைய தங்கம்மாவாய் மாறிட்டேன்னு சொல்லு என்று சொல்ல நினைத்தாள். சொல்ல முடியுமா? நாணமோ, அழுகையோ. ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது. கூடடத்தோடு கூட்டமாக நடந்து, அம்மாவுடன் வீட்டுக்கு வந்த தங்கம்மா. மீனாட்சியைப் பார்க்க நினைத்தாள். இதற்குள், நயினாரம்மாவிற்கு ஆறுதல் சொல்வதற்காக, கிழவி, அவளை தன்னுடன் கூப்பிட்டாள். நயினாரம்மா வீட்டில் இருந்த தங்கம்மாவிற்கு, அந்தக் குடும்பத்தின் சோகக்கதையுடன், தன் கதையும் நினைவுக்கு வந்தது. ஊரே தன்னை நிரபராதியாக நினைப்பதை உணர்ந்ததும், தான் நடந்து கொண்டது உரைத்தது. அவரு மனசு என்ன பாடு பட்டிருக்கும்... மீனாட்சி அண்ணிய... ஒரு நாளைக்கு நாலு தடவ பாக்குற நான்... நாலு மாதத்துல ஒரு தடவ கூட பாக்கலியே... என்னால எப்டி இருக்க முடிஞ்சது... அண்ணி என்ன நினைப்பாள்... அவரு லாக்கப்புல என்ன பாடு படுறாரோ... அண்ணிக்குத் தெரியுமோ... தெரியாதோ...' திடீரென்று தங்கம்மா எழுந்தாள்... குற்றவுணர்வில் ஓடினாள். இரவு, மணி இரண்டு இருக்கும். ஆண்டியப்பனின் வீட்டுக்குப் போனதும், "ஊரே அதிரும்படி கத்தினாள். 16 “லாக்கப் குடித்தனம் மூன்றாவது நாள். அன்றும் அவனை உதைத்தார்கள். போலீஸ் நெருப்பில், ஆண்டியப்பன் கரியவில்லை. மாறாக புடம்போட்ட தங்கம்போல் மின்னினான். அந்த அடி நெருப்பு, அவனைச் சூடாக்கியதே தவிர, கடவில்லை. வைரப்படுத்தியதே தவிர. வதக்கவில்லை. அவனில் ஒரு வைராக்கியம் பிறந்தது. நெருப்பு, எதையாவது பிடித்துக் கொண்டுதான் நிற்குமே தவிர, அதனால் தனித்து நிற்க முடியாது. இது போல், தனித்து நிற்க முடியாமல், தன்னையே பிடித்துக் கொண்டிருந்த நியாய நெருப்பில் தன் மேனியில் விழுந்த அடிகள், நியாயத்தின் மீதே பட்டதாக அவன் பாவித்துக் கொண்டதாலும், 'அச்சமில்லை.... அச்சமில்லை... அச்சமென்ப தில்லையே' என்று அடிக்கொரு தடவை, அவன் பாரதியாரின் அடிகளைப் பற்றிக்கொண்டதாலும், போலீஸ்காரர்களின் கைகள்தான் ஒய்ந்தன. உதைத்த பூட்ஸ் கால்களில்தான் சுளுக்கு ஏற்பட்டது. சூடு சூட்டைத் தணிக்கும் என்பதுபோல், போலீஸ்காரர்களின் கோப நெருப்பு, அவனது நெஞ்சில் அனலாகி, கண்களில் சூடான நெருப்பை, குளிர்வித்தது.