பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 1 7 ஆண்டியப்பனுக்கு சிந்தனை அனைத்தும் ஒருங்கிணைந்து, வீட்டை நோக்கியது. தங்கச்சிக்கு ஏதாவது ஆகியிருக்குமோ... குழந்தைக்கு ஏதாவது... அடக் கடவுளே... என் தங்கச்சியை நிராதரவாய் விட்டுட்டு வந்துட்டனே... இப்போ என்ன ஆகியிருக்குமோ... கடவுளே... அப்படியே ஏதாவது ஆகியிருந்தால்... அது குழந்தையா இருக்கட்டும். தங்கச்சியாய் இருக்கப்படாது. அய்யோ குழந்தை என்ன பாவம் பண்ணிச்சது... கடவுளே. யாருமே சாவப்படாது. யாருமே சாவப்படாது..." அவனுக்கு, அங்கேயே தாவி, தன் வீட்டில் குதிக்க வேண்டும்போல் தோன்றியது. அங்கேயே செத்து தன் வீட்டில் ஆவியாகப் போய் நிற்க வேண்டும்போல் தோன்றியது. சட்டாம்பட்டியில் உள்ள தன் வீட்டையே தான் விடும் பெருமூச்சால் இழுத்து, அங்கேயே கொண்டு வர வேண்டும்போல் தோன்றியது. உடலெல்லாம் ஒரே அலுப்பாய் மாறியது போல் சுருண்டு நின்றான். பிறகு அங்கேயே நின்று கொண்டு, தன் வீட்டில் இப்போது என்ன நடக்கும் என்பதைப் பார்க்கிறவன் போல், விஸ்வரூபம் எடுத்தவன் போல், எட்டிப் பார்த்தான். இந்நேரம் அங்கே என்ன நடந்திருக்குமோ... எது துவங்கியிருக்குமோ... எது முடிந்திருக்குமோ... இதற்குள், தென்காசி பஸ் உறுமியது. அப்போது தான் ஆண்டிக்கு சுயநினைவு வந்தது. வீட்டிற்குப் போக வேண்டுமானால், பஸ்சில் ஏறித்தான் போயாக வேண்டும். பறக்க முடியாது. தன்னையறியாமலே சட்டைப்பைக்குள் கைவிட்ட ஆண்டி, துணுக்குற்றான். இருந்த ஐந்து ரூபாயில், நான்கு ரூபாயை ஹோட்டல் பில் சாப்பிட்டுவிட்டது. பேச்சுவாக்கில கோபாலிடம் கேட்க மறந்துவிட்டான். இப்போது என்ன செய்வது...? பஸ்சுக்குள் ஏறி, கண்டக்டரிடம் நிலைமையைச் சொல்லி கெஞ்சலாமா... உள்ளே இருப்பவர்களிடம் கேட்கலாமா... வேண்டாம். பிறர் வேதனையை, தன் வேதனையாகக் கருதும் காலம் இன்னும் வரவில்லை... எல்லோரும் சிரிப்பார்கள். அதோ ஹோட்டலில் இருந்து போகிறாரே... உறவினர். அவரிடம் ஒட்டமாய் ஓடிப்போய் கேட்கலாமா... கடனாக ரெண்டு ரூபாய் கேட்கலாமா... வேண்டாம். வேண்டாம்... அடுத்த தெருவில் - அதுவும் பங்காளி வீட்டில் நோயா, நொடியா என்பதையோ, நோயாளி, தாயா... பிள்ளையா என்பதையோ தெரிந்து கொள்ள விரும்பாத இவனிடம் காசு வாங்கி, சீக்கிரமாய் வீட்டுக்குப் போறதைவிட... போகாமல் இருப்பதே மேல்... அப்படிப் போனால்... என் தங்கச்சி ஆன்மா சாந்தியடையாது. அய்யோ என் தங்கச்சி செத்திருப்பாளோ...