பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 1.27 தென்காசி பஸ் நகர்ந்து ஓடியது. அதன் பின்னால் ஒடிய ஆண்டியின் கண்களில் புழுதியை வாரி இரைத்துக் கொண்டே, அது ஓடியது. அடுத்த பஸ் கண்டக்டர் பணியனுடன் நெளித்துக் கொண்டு நின்ற தோரணையைப் பார்த்தால், இன்னும் அரைமணி நேரம் ஆகும். என்ன Q&timujébmuło ஆண்டியப்பன். அந்த நாற்பது கிலோ மீட்டர் . துரத்தையும். காலாலேயே கடப்பது என்று தீர்மானித்தான். ஒட்டமு: நடையுமாகப் போனான். எல்லாம் முடிந்திருக்குமோ என்ற முடிவில்லாத் துயரத்தில் நடந்தான். கண் முன்னால் நடக்கும் அக்கிரமத்தையும், அதன் காரண கார்த்தாக்களையும் ஒட்ட முடியாமல் போனதற்குப் பிராயச்சித்தம் செய் பவன் போல் ஓடினான். எதிரே வரும் பஸ்களும், லாரிகளும் ஒதுங்கட்டும், அல்லது தன்னை ஒழிக்கட்டும் என்பது போலவும். தான் மோதினால், அவைகளால் தாங்க முடியாது என்பது போலவும் அவன் தாவி நடந்தான். என்னதான் ஓடினாலும் என்னதான் நடந்தாலும்... உடலமைப்பு என்று ஒன்று இருக்கிறதே... அவனால் ஒட முடியவில்லை. சிறிது இளைப்பாறினான். மாறாந்தை என்ற ஊரைக் கடந்தபோது ஒரு புளிய மரத்திற்கு அருகே சிறிது நின்றான். எதிரே வரும் பஸ்களுக்கு முன்னால் போய் விழலாமா என்பது போலக்கூட நினைத்தான். அந்த மரத்திலேயே துண்டைக் கட்டி, தூக்குப்போட்டுச் சாகலாமா என்பது போலவும் 5া6ক্টো6তেfী৪ঠা msষ্ঠা. பிறகு, மூச்சை இழுத்துப்பிடித்து, நிதானமாக விடவிட, அவனுள் ஒரு வைராக்கியம் ஏற்பட்டது. தங்கச்சிக்கு ஏதாவது ஆகியிருந்தால், குறைந்தது இரண்டு பேரையாவது தீர்த்துக் கட்டியாகணும்... அவள் மட்டும் இறந்திருந்தால், அவனுக்கு. ஊரே திறந்தவெளிச் சிறைச்சாலையாகிவிடும்.அதைவிட, தன் குடிசை வீட்டைவிட, வலுவான சுவர்களைக் கொண்ட, இரும்புக் கிராதி கதவுகளைக் கொண்ட கட்டிடம் எவ்வளவோ மேல்.... ஆண்டியப்பன். மீண்டும் நடந்தான். கால்களே, பஸ் சக்கரங்களாக, கைகளே ஸ்டேரிங்காக அவன் தன் உடம்பை ஒட்டிக் கொண்டு, மகாத்மா காந்தி தண்டி யாத்திரையில் நடந்ததுபோல் நடந்தான். எண்சாண் உடம்புக்குள், எண்ணங்கள் சிறைபட. அந்த எண்ணங்களே, உடம்பை யந்திரப் பொறியாக்க, யந்திரம் போல, ஆலங்குளத்தைத் தாண்டி, அத்தியூத்தைக் கடந்து, சாலைப் புதுரை நெருங்கும்போது, பிற்பகல் மூன்று மணியாகி விட்டது. ஊரை நெருங்க நெருங்க, அவனை உள்ளம் நெருக்கிக்கொண்டே இருந்தது. இதற்குள், தென்காசியில் இருந்து, நெல்லை நகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஒரு பஸ்சில் இருந்து, ஆண்டி... ஆண்டி என்று சத்தம் கேட்டது. உலகில், தன்னைக் கூப்பிட யாரும் கிடையாது என்பது போல, வேறு யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று நினைத்தவனாக,