பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ஊருக்குள் ஒரு புரட்சி அவன் நடந்து கொண்டிருந்தபோது, இரண்டு பேர் மூச்சிரைக்க ஓடிவந்து, அவன் தோளைப் பிடித்தார்கள். ஆண்டி. நிமிர்ந்து பார்த்தான். ஒருவன் சேரிவாசி கோவிந்தன். இன்னொருவன், அவனுடன் மரம் வெட்டும் மாடசாமி. இருவர் கண்களிலும் சோகம் மண்டி, சாம்பல் நிறம் பூத்திருந்தது... ஆளை எரித்தால் கிடைக்கும் அஸ்தியைப் போல.. ஆண்டியப்பன், அவர்களைப் பார்த்தவுடன், அவர்கள்தானா என்று நிச்சயப்படுத்திக் கொள்பவன் போல் சிறிது உற்று நோக்கிவிட்டு, பிறகு படபடப்பாக "யாருக்கும்... எதுவும் இல்லியே..." என்று சொல்லிவிட்டு, வெறித்துப் பார்த்தான். மாடசாமி இழுத்தான்: "அப்படில்லாம் ஒண்னுமில்ல..." "ஓங்களுக்குக் கோடிப் புண்ணியம்.... சொல்லுங்கப்பா... காலுல வேணுமுன்னாலும் விழுறேன். உயிருக்கு ஏதாவது..." "உயிருக்கு ஒண்னும் இல்ல. அப்படியே ஆனால்தான் என்ன செய்ய முடியும்..." "தங்கச்சிக்கா... இல்ல..." "மீனாட்சிக்குததான்... பிழைச்சிக்கிடுவாள்... சரி. பஸ் வருது... ஏறு... பஸ்சில், அவர்கள் ஆண்டியப்பனிடம், ஊரில் நடந்ததை விளக்கி னார்கள். மீனாட்சியைப் பற்றி மட்டும் விளக்கமாகச் சொல்லாமல், மற்றவற்றை விளக்கமாகச் சொன்னார்கள். ஆண்டியப்பன், மாடசாமியையும், கோவிந்தனையும் பார்த்த பத்து நிமிடத்திற்குள்ளேயே புரிந்து கொண்டான். என்றாலும், அவர்கள் வாயால், அவன் கேட்கக் கொதிக்கும் அந்த வார்த்தையை வரவழைக்க விரும்பவில்லை. உண்மையை எதிர்நோக்கப் பயம். தங்கை உயிருடன் இருந்தாலும் இருக்கலாம் என்கிற நப்பாசை. ஊர் போய்ச் சேரும் வரைக்காவது, அவள் உயிரோடு இருப்பதாக நினைக்கத் தூண்டிய வினோதமான எண்ணம். அந்த மூவரும் கோணச்சத்திரத்தில் இருந்து, சட்டாம்பட்டியை நோக்கி நடந்தார்கள். ஊருக்குள் வந்ததும், ஊரில் பெரும்பகுதியினர். தாங்கள் கையெழுத்துப போட்டதால்தான் ஆண்டியப்பன் விடுதலை யானான் என்ற பெருமிதத்தோடு, அவனைப் பார்த்தார்கள். அந்தப் பெருமிதம் கொடுத்த நெருக்கத்தில், அவன் வீட்டில் நடக்கும் சோகம். தத்தம் வீடுகளில் நடப்பது போலவும் நினைத்தார்கள். தெருக்களில் நின்றவர்கள் அனைவரும், அவன் பின்னால் நடந்தார்கள். ஊருக்குள் வந்தவுடன். ஆண்டியப்பனிடம் மீனாட்சி இறந்ததைப் பற்றி, யாரும் சொல்லவேண்டிய அவசியமில்லை. நாவிதர் ஊதிய இழவுச்சங்கின் ஒலி, அவன் காதுகளுக்குள் ஒலமிட்டது. பெண்களின்