பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 13 * இழவுக்கு வந்த கூட்டம், தினவெடுத்து நின்றது போல் சிலிர்த்து எழுந்தது. "என்னடா நினைச்சிக்கிட்டிங்க... ஆம்புளைங்கன்னா... பிணத்த தூக்குங்கடா பார்க்கலாம்... கொடுமைக்கும் ஒரு அளவு வேணுமுய்யா.... பிணத்துக்கிட்ட போங்க பார்க்கலாம்... ஒங்க காக்கிச் சட்டைய... கழத்தாட்டா... என்னென்னு கேளுங்க..." "போலீஸ்காரங்க என்னடா பண்ணுவாங்க... எல்லாம் இந்த முன்சீப் பாவியால வந்தது... தேவடியாமவனுக்கு... இன்னொரு பாடை கட்டுங்கடா..." 18 நினைத்துப் பார்க்க முடியாத காலத்தில் இருந்து, மற்றவர்களுக்கு நினைவுகளுக்குரிய உணர்வுகளே இல்லாதது மாதிரி, ஒரு சிலரே எல்லாச் சமயத்திலும் பேசிக் கொண்டிருந்த நிலையை மாற்றுவதுபோல், இப்போது, எல்லோரும் ஒரே சமயத்தில் பேசினார்கள். ஊரில், எது எது எப்படி எப்படி நடக்கிறது என்பது தெரிந்திருந்தாலும் அவை பற்றிய தெளிவில்லாமல் காலங்காலமாய் காலத்தைக் கடத்திய ஏழை - பாளைகள். இப்போது தெளிந்ததுபோல் பேசினார்கள். எல்லோரும் ஒருசேரக் குழுமிய அந்த இழவு வீட்டில், பல இழவுகள் நிர்ணயிக்கப்படப் போகின்றன என்பது போன்ற வெடிச் சத்தங்கள். அடிவயிற்றின் சூட்டைக்காட்டும் நெருப்புப் பேச்சுக்கள். இதயத்தைத் துடைத்தெடுத்து, செம்மைப் படுத்தும் வார்த்தை ரவைகள். பிணமாக வாழ்ந்தவர்கள்ை, பிணங்கள் தெளியவைத்து விட்டது போன்ற, சாகத்துணிந்த துணிச்சல் பேச்சுக்கள். சின்னான் சொன்னதுபோல், தனித்தனி குச்சிகளாக இருந்தவர்கள். இப்போது ஒருசேர விறகுக் கட்டாகி விட்டதால் ஏற்பட்ட வீரப்பார்வைகள்... வேதாந்தத்திற்குப் பதிலாக வீரத்தை உமிழ்க்கும் வார்த்தைகள். ஆண்டாண்டு காலமாக, அடி மனதில் பய நெருப்பை வைத்துக் கொண்டிருந்த மனிதர்கள். இப்போது அதை நெஞ்சிலே கோப நெருப்பாகக் கொண்டு வந்தார்கள். மீனாட்சி இறந்ததற்கு, தான் காத்தாயியை அனுப்பியதுவே காரணம் என்று ஊர் முழுமையாகப் புரிந்து கொண்டால், உதை கிடைக்கும் என்று நினைத்து, தனியாக உதை வாங்கத் தயாராக இல்லாத மாசானந்தான். தன் பழைய காதலியின் புருஷனை ரிப்போர்ட் செய்ய வைத்தார் என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆண்டியப்பனை விடுதலை செய்யக் கோரி 'கை' கொடுத்தவர்கள், இப்போது கை நீட்டவும் தயாராகிவிட்டார்கள். குனிந்த தலை நிமிராமல், நிர்மலமான தோற்றமும், நெஞ்சைத் தொடும் வாஞ்சையும் கொண்டு வாழ்ந்த மீனாட்சியை, ஒரு அப்பாவி ஏழைப் பெண்ணை. இறந்த பிறகும் பழிவாங்கத் துடிக்கும் முன்லிப்பின் அற்பத்தனம், அவர்களுக்கு