பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ஊருக்குள் ஒரு புரட்சி ஆவேசத்தைக் கொடுத்தது. இன்றைக்கு மீனாட்சிக்கு நேர்ந்தது. நாளைக்குத் தங்களுக்கும் நேரலாம் என்ற அச்ச உணர்வு, தாக்கும். தற்காப்பு உணர்வாகியது. நடைப்பிணங்களாக வாழ்ந்த பெரும்பாலோர் இப்போது தங்களை, அந்தப் பிணத்தோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள். உடலெல்லாம் கோபத் தீ பற்றி, மேனி எரிந்து, வாய் வழியாகப் புகை வருவது போல், வார்த்தைகள் அனல் கட்டிகளாயின. "எங்க பிணத்தக் கொண்டுபோகு முன்னால. இந்தப் பிணத்த தொட முடியாது." "நீங்க மொதல்ல... பிணத்த தொடுங்கடா பார்க்கலாம்..." "ஏன்லே பேசிக்கிட்டு இருக்கிய... செறுக்கி மவனுவள தூணுல கட்டி வையுங்கள..." பேசிக் கொண்டிருந்த கூட்டம், திடீரென்று அமைதியாகும்படி, தங்கம்மா விரித்த தலையோடு, விரித்த கரங்களோடு. கோர சொரூபியான காளிபோல, போலீஸ்காரர்கள் முன்னால் வந்து நின்றாள். புருவங்கள் வில்போல் வளைய, நாக்கு அம்புபோல் நீள, அவள் அழுத்தமான அமைதியுடன் போலீஸ்காரர்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். சப்-இன்ஸ்பெக்டருக்கு, அந்தப் பார்வையின் கோரத்தைவிட அதனைத் தூண்டிவிட்ட சோகம் மனதை கெளவியிருக்க வேண்டும். சற்று படபடப்பாகவே பேசினார்: "நாங்க... எங்க கடமயச் செய்யத்தான் வந்தோம். ஒரு கிராம முன்லிப் தற்கொலை நடந்திருக்கதாய் ரிப்போர்ட் கொடுத்தால் நாங்க சும்மா இருக்க முடியாது. சும்மா இருந்தோமானால், வீட்ல சும்மா இருக்க வேண்டியது வரும். அதனால வந்தோம். ஆஸ்பத்திரியில் பிணத்த சோதனை செய்ய வேண்டியதும், அதுக்கு, நடவடிக்கை எடுக்க வேண்டியதும் எங்க கடமை..." இதற்குள் காத்தாயி, சிடுசிடுவென்று அங்கே ஒடி வந்து போலீஸ்காரர்களுக்கு மத்தியில் பாதுகாப்புத் தேடுபவர் போல் நின்ற முன்லீப்பை வெறித்துப் பார்த்துக் கொண்டே வெடித்தாள்: "ஏய்யா... முன்ஸிப்பு... ஒன் மொகரக் கட்டைக்கு நியுல்லாம் முன்லிப்பாயா என்னப் பாத்து பதில் சொல்லுய்யா... ஒருத்தி தற்கொலை பண்ணனுமுன்னா, தங்கரளிக் கொட்டைய... இல்லன்னா... பயிரோனை சாப்புடனும்... என் ராசாத்தி படுத்த படுக்கையா கிடந்தாள்... நடக்கவே முடியாத அவளால... தோட்டத்துல போய், தங்கரளிக் கொட்டைய பறிக்க முடியுமாய்யா? தரையில விழுந்த கையைத் தூக்கி... வாய்கிட்ட கொண்டு போவ முடியாத அளவுக்கு... இருந்தவளால... எப்படிய்யா எழுந்து நடந்து, மருந்து வாங்கியிருக்க முடியும். கொஞ்சமாவது யோசிச்சி பாத்தியா... நீ பிணத்த சோதன போடணுமுன்னு எழுதலாமாய்யா... சோதன போடணுமுன்னு நினைச்சா. நீ தாங்குவியாய்யா... து... நீயில்லாம்... மனுஷன்...?"