பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 133 திடீரென்று தெய்வானை ஒடி வந்தாள். இவள் இருபது இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்லிப்பிடம் வரி கட்டப்போன போது, சில சமாச்சாரங்களை கையுங்களவுமாகக் கண்டவள். "சோதன போடணுமுன்னு எழுதியிருக்கியரே... ஒம்ம வீட்டு சங்கதி தெரியுமா? ஒம்ம மகள் மல்லிகாவோட ரத்தத்த சோதன போட்டுப் பாப்போமா? பாத்தால் அவள் ஒம்ம மவளா... மாசானம் மவளான்னு தெரியும். அதுக்கு நீரு. சோதன போடச் சம்மதிச்சா நாங்க இதுக்கு சம்மதிக்கோம் என் பிள்ளைக்கு பள்ளிக்கூடத்துல சோறு போடலன்னு, ஒம்மகிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன்?... அப்போசும்மா இருந்த கை... இப்போ எதுக்காவய்யா எழுதணும். இந்த கைய ஒடிக்க எவ்வளவு நேரமுய்யா ஆகும்...? வரிப்பணத்துக்குத்தான் ரசீது தராம தின்னு தொலைக்க... இப்ப பிணத்தயும் தின்னு தொலைக்க நினைக்கி யாக்கும்..." கிராம முன்ஸிப்பால், இதற்குமேல் தாங்க முடியவில்லை. கூட்டத்தில் இருந்த 'சொக்காரப் பயல்கள்கூட சும்மா இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து ஏதோ சொல்லப் போனார். இதற்குள், ஆண்டியப்பன் அடிமேலடி வைத்து நடந்து சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் வந்து நின்றான். காத்தாயி, அவன் ஏதாவது செய்துவிடப் போகிறான் என்பதுபோல் குறுக்கே வந்தபோது, வெறுமையுடன் வெறித்துக் கொண்டிருந்த தங்கம்மாவும், ஒரளவு கயநினைவு பெற்றவளாய், "நீரு... பேசாம நில்லும். அய்யா... போலீஸ் மவராசன் மாரே, உயிருக்கே மதிப்பில்லாத ஆஸ்பத்திரியில பிணத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்குமுன்னு தெரிஞ்சவள் நான். உங்களுக்கு சடலம் வேணுமுன்னா... என் சடலத்தை வேணுமுன்னா எடுத்துக்கிட்டுப் போங்க... எங்க மயினி..." தங்கம்மாவால், மேற்கொண்டு பேச முடியவில்லை. தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள். முகத்தில் அடித்துக் கொண்டாள். ஆண்டியப்பன், அவளை இழுத்து, தன் இடுப்புப் பக்கமாக இணைத்துக் கொண்டிருந்தபோது, கூட்டம், கோபமாக எழுந்திருக்கப் போனது. ஆண்டியப்பன். கூட்டத்தினரைக் கம்பீரமாக கையசைத்து. சும்மா இருக்கும்படி சமிக்ஞை செய்து விட்டு, ஆணியடிப்பதுபோல் பேசினான்: "சப்-இன்ஸ்பெக்டர் சார். இது தற்கொலை இல்ல... இது கொல ஸ்ார்... நீங்க கண்டுபிடிக்க முடியாத... அப்படி கண்டு பிடிச்சாலும் வழக்குப்போட முடியாத கொல ஸார். என் தங்கச்சிக்கு மார்புல கட்டி வந்தவுடனே... நான் சர்க்கார் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனேன்... அங்கே டாக்டர் இல்ல... டாக்டர் இருந்த சமயத்துல மருந்து இல்ல... அந்த ஆஸ்பத்திரியில... அவள கவனிச்சிருந்தால் செத்திருக்க மாட்டாள்... இந்தப் பாழாப்போற மாட்ட... நான் மந்திரி கையால வாங்காமல் இருந்திருந்தால்... நானுண்டு... என் வேல உண்டுன்னு இருந்திருப்