பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 1 35 பிணமான மீனாட்சி, கோபந்தனிையாத கண்ணகிபோல் தோன்ற, ஒரே அமளி, ஒரே கூச்சல். "சப்-இன்ஸ்பெக்டர். பயந்துவிட்டார். போலீஸ்காரர்கள் தவித்தார்கள். முன்ப்ே தோலுரித்த வாழைப்பழம்போல் துவண்டார். ரிவால்வரை எடுக்கக்கூட இடமில்லாதபடி முண்டியடித்த கூட்டத்திற்குள் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர், "கொஞ்ச நேரம் சும்மா இருங்க..." என்ற பலமான குரல் கேட்டு. எட்டிப் பார்த்தார். சின்னானும், கோபாலும் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களைப் பார்த்த கும்பல், மீண்டும் கூட்டமாகி, அவர்கள் போலீஸ்காரர்களிடம் போவதற்கு வழிவிட்டது. கோபால், தன் கையில் வைத்திருந்த சூட்கேலை, ஒரு ஒரமாக வைத்தான். சின்னான். அமைதியாகப் பேசினான்: "நடந்ததை வழியில் கேள்விப்பட்டேன். நீங்க போலீஸ்காரர்களை அடிக்கப் போறது தப்பு. அவங்க, அவங்களோட கடமையைச் செய்ய வந்திருக்காங்க..." "அவங்கள அடிக்கப் போகலப்பா... இந்த முன்ஸிப் பயல அடிக்கப் போனோம். செறுக்கி மவனோட மிளகாய் தலைய பறிக்காம விடமாட்டோம். ஒஹோன்னானாம்..." "அதுவும் தப்பு. முன்லிப், போலீஸ்காரர்கள். பண்ணையாருங்க... தங்களோட பதவியையும், பணத்தயும் தப்பா பயன்படுத்துறது எப்படித் தப்போ, அப்படி, நாம அடிக்கப் போறதும் தப்பு. அவங்க. ஏழைகள் மேல அதிகாரத்த ஏவி விடுறது எப்படிச் சுரண்டலோ. அப்படி நிர்க்கதியா மாட்டிக்கிட்ட தனி மனிதர்களை, நாம் மெஜாரிட்டியாய் இருக்கோம் என்கிறதுக்காக அடிக்கிறதும் சுரண்டல்தான். இதனால, நிர்க்கதியாய் நிற்கிற நாமதான் மேலும் நிர்க்கதியாய் நிற்கணும்..." சப்-இன்ஸ்பெக்டர், கொஞ்சம் சத்தம் போட்டே பேசினார்: "நாங்க... முன்லிப் ரிப்போர்ட் கொடுத்ததால வந்தோம். இப்போ, மீனாட்சி... இயற்கையாகவே மரணமடைந்தாள் என்கிறது புரிந்துட்டு. பஞ்சாயத்தார் இப்படி தீர்ப்பளித்து விட்டதாய் ரிக்கார்டை குளோஸ் பண்ணிருவேன். ஒங்க இஷ்டப்படி நீங்க அடக்கம் பண்ணிக்கலாம். யோவ், முன்லிப்பு... ஒன்னோட பதவித் திமுறுல, விவகாரம் எப்படி விபரீதமாய் மாறிட்டு. பார்த்தியா...? தாசில்தார்கிட்ட சொல்லி... ஒன்ளை என்ன பண்றேன் பாரு ஒன்னை மாதுரி அறிவு கெட்டவங்க, சின்னச் சின்ன பதவியில இருக்கதாலத்தான். பெரிய பதவியில இருக்கவங்களும் அறிவு கெட்டவனா போயிட்டாங்க..." சமயோசித புத்தி கொண்ட சப்-இன்ஸ்பெக்டர், சொன்னதோடு நிற்கவில்லை. மீனாட்சிப் பிணத்திற்கு அருகே சென்று, தன் தொப்பியைக் கழற்றி, கையில் வைத்துக் கொண்டு, சிறிது நேரம் மெளனமாக தலை கவிழ்ந்து நின்றார். இதைப் பார்த்த