பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 36 ஊருக்குள் ஒரு புரட்சி போலீஸ்காரர்களும், தங்கள் தொப்பிகளைக் கழட்டி கைகளில் வைத்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். ஐந்து நிமிடத்திற்கு முன்பு ஆவேசப்பட்ட அத்தனை பேரும். மனதுக்குள் அழுதவர்களாய், கண்களில் பொங்கி, கன்னங்களில் வழிந்த நீரைத் துடைக்க மறந்தவர்களாய், அப்படியே குலுங்கிப்போய் நின்றார்கள். இந்த சாக்கில், முன்ஸிப் வெளியேறி விட்டார். இதுவரை அழாமலும், அழுகைக்குரிய அடையாளங்களைக் காட்டாமலும் இருந்த ஆண்டியப்பன், அந்த ஜன சமுத்திர பாச சாகரத்தில், ஆவேசச் சூட்டைத் தனித்துக்கொண்டவன்போல், முதன் முறையாக அழுதான். "மீனாட்சி... ஒனக்காக... எத்தனை பேரு அழுவுறாங்க பாரு மீனாட்சி. அனாதையாச் செத்தாலும். இப்போ ஒன்னை மகள் மாதுரி ஜனங்க நினைக்கிறதப் பாக்க மாட்டியா மீனாட்சி ஒனக்காவ கூடியிருக்கிற இந்தக் கூட்டத்த... ஒரு தடவ பாத்துட்டு, அப்புறமா கண்ண மூடு மீனாட்சி. நாம அனாதை இல்ல மீனாட்சி. ஒருவேளை, அண்ணன் அனாதையா நிக்கப் படாதுன்னு. நீயே தெய்வமாகி... இவங்கள கொண்டு வந்தியா மீனாட்சி? யாருமே எட்டிப் பார்க்காமல் போன வீட்டுக்கு... கூட்டம் வரணுமுன்னு நினைச்சே செத்தியா...? சாகும்போது... என்னை நினைச்சியாம்மா... அண்ணன், அனாதையா விட்டுட்டுப் போயிட்டானேன்னு. கலங்குனியாம்மா... உயிர் போவும் போது. உன் மனக என்ன பாடு பட்டுதோ... என்னெல்லாம் நினைச்சுதோ... நம்மள மாதுரி ஏழையளுக்கு மனசுன்னே ஒண்ணு இருக்கப்படாது மீனாட்சி. இருக்கப்படாது..." எவரோ, இரண்டு பேர், ஆண்டியப்பனைப் பிடித்து, வெளியே இழுத்துக்கொண்டு போனார்கள். சப்-இன்ஸ்பெக்டர், கண் கலங்கியவராய். சின்னானைப் பார்த்து, "அப்போ நான். வரட்டுமா லார்... டோண்ட் ஒர்ரி... ரிக்கார்டை குளோஸ் பண்ணிடுறேன்" என்றார். சின்னான் உடம்பை அசைக்காமலே, அசைக்க முடியாதபடி பதிலளித்தான்: "மீனாட்சியோட ரிக்கார்டை நீங்க குளோஸ் பண்ணுங்க... ஆனால் அவள் ரிக்கார்டை... நாங்க இனிமேல்தான் துவக்கப் போறோம். ரொம்ப தேங்ஸ் லார்... ஒங்களுக்கு... பச்சைத் தண்ணிர்கூட கொடுக்க முடியல..." போலீஸ்காரர்கள் போய்விட்டார்கள். வாதமடக்கிக் கம்புகள் குறுக்கும் நெடுக்குமாகப் போடப்பட்டு, தென்னை ஒலைகள் விரிக்கப்பட்டன. நாவிதர், பிணத்த தூக்குங்கய்யா என்று சொல்லிக் கொண்டே. கண்ணிரை, கையிலுள்ள சங்காலேயே லாவகமாக துடைத்துக் கொண்டு, சங்கு ஊதினார். உம்பைச் சிலிர்த்த ஒசை, மனிதனின் ஜீவ மரணக் கணக்கை முடிப்பதுபோல் ஒங்காரமாக ஒலித்த ஓசைக்கிடையே, மீனாட்சி, பாடையில் கிடத்தப்பட்டாள். நாவிதரின் பையன் நிலக்கரிகள் போடப்பட்டு, நெருப்பு மூட்டம்