பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 1.37 செய்யப்பட்ட கலயத்தை எடுத்துக் கையில் பிடித்துக் கொண்டான். இதற்குள், மீனாட்சியின் புருஷனும், அவன் அம்மா இதர வகையறாக்களும் வந்து விட்டார்கள். புருஷன்காரன், அம்மாவுக்குத் தெரியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டான். பாடையை, நான்கு பேர் தூக்கினார்கள். ஆண்டியப்பனையும் நான்கு பேர் கைத் தாங்கலாகப் பிடித்துக் கொண்டார்கள். தங்கம்மாவை, நான்கு பேர் அனைத்துக் கொண்டார்கள். பிணம் கொண்டு செல்லப் படுவதை, பரமசிவம் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டே மாசானம், குமார், மல்லிகா, பரமசிவம் மகள் ஆகிய நான்குபேர் பார்த்தார்கள். நான்கும். நான்கும் ஒன்றைக் கழிக்காமல், பெருக்கும் என்பது போல் பெருங்கூட்டம், பிணத்திற்குப் பின்னால் போனது. முதன்முறையாக, மெத்தை போலிருந்த படுக்கையில் படுக்கக் கொடுத்து வைத்த மீனாட்சி, சுடுகாட்டில், ஏற்கெனவே விறகுகள் அடுக்கப்பட்டிருந்த அடுக்கில் வைக்கப்பட்டாள். அவளது குழந்தைக்கு, மொட்டையடிக்கப்பட்டது. அந்தச் சின்னஞ்சிறு குழந்தை, அம்மாவை விநோதமாகப் பார்த்தது. இதுதான் அம்மாவைப் பார்க்கும் இறுதியான தருணம் என்பது தெரியாமல், அது உறுதியோடு பார்த்தது. அம்மா இருந்தால், கோவில் குளத்தில் எடுக்க வேண்டிய பிறந்த முடி - தாயவள். மடியில் வைத்துப் பிடித்திருக்க, தாய்மாமன் முறுவலிக்க. தகப்பன் சிரிக்க, தெய்வத்திற்குக் காணிக்கையாகக் கொடுக்கவேண்டிய பிறந்த முடியை, தெய்வமாகிய அம்மாவிற்கே கொடுக்க வேண்டிய அவல நிலை தெரியாமல், அந்தக் குழந்தை சிரிக்கக் கூடச் செய்தது. தாயில்லாப் பிள்ளை ஊர் சிரிக்க ஆகும் என்ற உண்மை தெரியாமல், அது சிரித்தது. "குழந்தய... சிதைக்கு கொள்ளி வைக்கச் சொல்லுங்கய்யா" என்றார் நாவிதர். ஆண்டியப்பன் இடுப்பில் இருந்த குழந்தையுடன் சிதையை நெருங்கினான். அவனால் நடக்க முடியவில்லை. நான்குபேர் தள்ளிக் கொண்டு போனார்கள். குழந்தையின் கையில், கொள்ளிக்கட்டை கொடுக்கப்பட்டது. அதன் கையையும், கட்டையையும் சேர்த்து ஒருவர் ஒப்புக்கு சிதையருகே கொண்டு போனார். ஆண்டி கதறினான். அவனையும், குழந்தையையும் முன்னால் கொண்டு வந்தவர்கள், இபபோது பின்னால கொண்டு போனார்கள். சிதையில் தீ பிடித்தது! சிதையில் மட்டுமா? 19 ഖിത്രകേന്ദ്ര சேர்ந்து, மீனாட்சி எரிந்து கொண்டிருந்தாள். மயானக் காக்கைகள், அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்தன. பூணிக் குருவிகள், அருகே இருந்த தோட்டத்தில், எள் செடி ஒன்றை வளைத்து, சிதைத்துக் கொண்டிருந்தன. ஒருசில சமாதிகளில்