பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 ஊருக்குள் ஒரு புரட்சி முளைத்திருந்த எருக்கலைச் செடிகளை, மைனாக் குருவிகள், அலகுகளால் முகர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தன. அருகாமையில் இருந்த கிறிஸ்தவச் சுடுகாட்டில், வெள்ளை நிறத்தில், சிலுவைக் குறிகளுடன் அமைந்த சமாதிகளைப் பார்க்கையில் படுத்துக் கிடக்கும் பசுமாடுகள், தலைகளை நிமிர்த்திப் பார்ப்பது போல் தோன்றியது. அவற்றுள் நடமாடிய எருமை மாடுகள் ஒன்றிரண்டில், காகங்கள் உட்கார்ந்து, உன்னிகளைத் தின்று கொண்டிருந்தன. மாண்டு மடிந்தோரின் மரணக் கதைகளை விண்டுரைபபதுபோல, பனையோலைகளை சலசலக்க வைத்த பேய்க்காற்று ஒரு பழுத்த பனையோலையை வீழ்த்த, அந்த ஒலை, சிதையில் பட்டு, தீயோலையாக மாற, சிதைப் புகை, அடியில் செந்நிறமாகவும், நுனியில் கருமையாகவும் தோன்ற, பனைமரக்காடுகள் வழியாக, ஆகாயத்தைத் துளைக்கப் போவதுபோல் போனது. பேய்க்காற்றில விழுந்த தென்னங் குரும்பையை, சிட்டுக்குருவி ஒனறு கொத்திக் கொண்டிருந்தது. புல்லுக்கு மானாகவும், மானுக்குப் புலியாகவும், புலிக்கு வேடனாகவும் உருமாறியும், தாக்குவதில் துவக்கமாகவும், தாக்கப்படுவதில் முடிவாகவும் தோன்றும் உருமாற்றம் அல்லாது ஒரு மாற்றமும் இல்லாத மரணம், மவுடீகமாக கோர தாண்டவம் ஆடுவதுபோல். சிதைப்புகை, பேய்க் காற்றுக்கு ஏற்றாற்போல், நெளிந்தும், சிதைந்தும் ஒன்று பலவாகவும், பல ஒன்றாகவும், தீ நாக்கை தொங்க விட்டுக் கொண்டு ஆடியது. மீனாட்சி எரிந்து சாம்பலானதும். அந்த அஸ்தியை, அருகேயுள்ள ஏரியில் கரைப்பதற்காக, சற்றுத் தொலைவில், இருபது இருபததைந்து போ உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் தவிர, பெரும்பாலானவர்கள். வீடுகளுக்குத் திரும்பி விட்டாாகள். ஆண்டியப்பன், குழந்தையை தன் மடியில் வைத்துக் கொண்டு, அவனைப் போல் தோன்றிய அதன் மொட்டைத் தலையை தடவிக் கொண்டு, எரியும் சிதையை ஏக்கத்தோடு பார்த்தான். "பெண்டாட்டி செத்த துஷ்டியைக்கூட கேக்கல" என்று சொல்லி, யாரும் இரண்டாவது கலயானப் பெண்ணைக் கொடுக்க முன்வராமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, அம்மாவுடன் வந்தவன் போல் தோன்றிய மீனாட்சியின் புருஷன் கூட, எதையோ ஒன்றைப் பறிகொடுத்த ஏக்கத்துடன் நின்றான். 'நான் போட்ட தாலியக்கூட வித்துத் தின்னுட்டியடா பாவின்னு நாக்கப் பிடுங்கிட்டுச் சாகும்படியாய் கேளுடா என்று அம்மாக்காரி சொன்னதை மனப்பாடம் செய்திருந்த அவனால், இப்போது அதை ஒப்பிக்க முடியவில்லை. ஆண்டியைப் பார்த்து "அப்போ... நான்..." என்றான்.