பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40 ஊருக்குள் ஒரு புரட்சி பிரெஞ்சுப் புரட்சி... கடைசில எதேச்சாதிகாரத்துல முடியுறதுக்குக் காரணம் என்ன? சொல்லு பார்க்கலாம்..." ஆண்டி, கோபால் உட்பட எல்லோரும் சின்னானையே பார்த்தார்கள். சின்னான் தனக்குத் தானே பேசுபவன் போல் பேசினான்: "பொருளாதார சமத்துவத்தை வலியுறுத்தாத... எந்தப் புரட்சியும் வெற்றி பெறாது. சொத்துரிமையை ஒழிக்காத எந்தப் புரட்சியிலும் ஆன்மா இருக்காது. வெற்றிபெறும் போராட்டத்துக்குப் பெயர் புரட்சி. அதுவே தோல்வியானால் கிளர்ச்சி. இங்லிஷில் சொல்லப் போனால் முன்னால் சொன்னது ரெவலுவடின்... பின்னால் சொன்னது ரிபெல்லியன்... நான் செய்ய நினைக்கது புரட்சி. நீ செய்ய நினைக்கது கிளர்ச்சி... அதாவது நீ நினைக்கது மாதுரி போலீஸ்காரர்களையோ முன்ஸிப்பையோ அடிச்சிருந்தாலும் சரி... கொன்னுருந்தாலும் சரி... போலீஸ்காரங்க இதை தங்கள் டிபார்ட்மெண்டுக்கு எதிரான நடவடிக்கையாய் நினைப்பாங்க... பொது மக்களுக்கு, போலீஸ் என்றால் கிள்ளுக்கீரைன்னு ஒரு எண்ணம் வரப்படாதுன்னு. விவகாரத்த... சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாய் பார்ப்பாங்களே தவிர... பொருளா தாரப் போராட்டமாய் நினைக்கமாட்டாங்க... தமிழகம் முழுவதையும் அடக்குவதற்கு உள்ள அத்தனை ஆயுதப் போலீஸும், ரிசர்வ் போலீஸும், இந்த சட்டாம்பட்டியில் டேரா போட்டு, நம்மை, சட்டி பானையை உடைக்கிறது மாதுரி உடைச்சிருக்கும். இதை நீயே விரும்பமாட்டே... அதே சமயம். ரெண்டு விதவைப் பெண்களுக்காகப் போராடி... அந்தப் போராட்டம். ஊரையே மாற்றியிருக்கு... இதை மாற்ற வேண்டிய அளவுக்கு மாற்ற ஒரு புரட்சி தேவை." "சரி. ஒன்னோட புரட்சிதான் என்னதுப்பா?..." என்றான் பிச்சாண்டி, மாசானம் மோசடி செய்த பத்து மூட்டை நெல், அந்தப் புரட்சியில் கிடைக்குமா என்பதை அறிய விரும்பியவனாய். சின்னான், ரகசியம் பேசுவதுபோல் பேசி, தழுதழுத்த குரலில் முடித்தான். "அன்றைக்குஞ் சரி... இன்றைக்குஞ் சரி... ஆண்டியை உயிருக் குயிராய் நேசிக்கிறவன் நான். கிராமங்கள் குட்டிச் சுவராய் போவதற்கு முக்கால்வாசிக் காரணம், படித்த பயல்கள்தான். இவன்கள் பூர்ஷ்வா பயல்கள். அதாவது தங்களை முக்கியப் படுத்துறதுக்காக... எதையும் பிரச்சினையாக்குவாங்க. இவர்கள் மத்தியதர வகுப்பின் மேல்மட்ட வர்த்தக கலாச்சாரத்தின் வாரிசுகள். இவங்களுக்கு தத்துவம் முக்கியம் இல்ல. தலைமைதான் முக்கியம். எல்லாவற்றையும் தீர்க்கப் போறது மாதுரி பாவலா பண்ணும் இவங்க... யார்கூட வேணுமுன்னாலும் சேருவாங்க. தாங்கள் பெரிசாகணுங்கற ஒரே லட்சியத்துக்காக, தியாகம் செய்யத் தேவையில்லாத எதையும் செய்வாங்க. குமார், மாணிக்கம் இந்த வகைப் பயல்கள். காட்டிக் கொடுக்கிறது லேசான காரியம்