பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 1 41 என்கிறதுனால. அதை செய்துட்டாங்க... ஏன்னா... இவங்களுக்கு. இவங்கதான் முக்கியம்... அதனாலதான். ஆண்டிய மாதுரி ஏழைகளைத் து.ாண்டிவிட்டு அந்த ஏழைகளோட அடிவயிறுல எரியுற தீயில் குளிர் காய்வாங்க... ஆண்டியை ஆற்றில் தள்ளிட்டு.... அவன் பினம் மிதக்கும்போது, இந்தப் பயல்கள், அதுல சவாரி பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியும். அதனாலதான்... ஆண்டி... இவங்களோட பிரமையில் இருந்து விடுபடுறது வரைக்கும்... நான் காத்திருக்கத் தீர்மானிச்சேன். நான், இடையில தலையிட்டிருந்தால், இந்த ஆண்டியே... எனக்கு விரோதமாய் மாறி இருக்கலாம். அதே சமயம், இவனை. ஆபத்தில் இருந்து மீட்கிறதுக்காக அப்பப்போ முயற்சி எடுத்திருக்கேன். ஆனால்... நானும் ஒரு தப்புப் பண்ணிட்டேன். ஆண்டியை... அளவுக்குமேல் தவிக்க விட்டுட்டேன். இதனால மீனாட்சி இறக்க வேண்டியதாயிட்டு... அண்ணாச்சிய... போலீஸ் கையைக் கட்டிக் கொண்டு போனாங்க என்கிறத கேட்ட அதிர்ச்சியிலேயே அவள் செத்திருக்கலாம். இந்த வகையில், நானும் ஒரு கொலைக்காரன்தான்..." கோபால், பேச முடியாமல் விக்கித்துப்போன சின்னானின் முதுகைத் தட்டி, ஆசுவாசப் படுத்தினான். சின்னான் தொடர்ந்தான்: "ஒரு வகையில் மீனாட்சியோட மரணம் ஆண்டியப்பனோட இழப்பு... இன்னொரு வகையில் இவள் மரணம்தான் நாம். செய்யப்போற புரட்சியோட விதை. மீனாட்சி ஊன ரீதியில் இறந்து... நம் புரட்சியில் ஞான் ரீதியில் வாழப் போகிறாள். நம்முடைய புரட்சிக்கு, செத்து. உயிர் கொடுத்துட்டாள்..." "சரி, ஒன்னோடி புரட்சிதான் என்ன... நான் வெள்ளாமை செய்த நிலம் கிடைக்குமா... ஆண்டியோட பசுமாடு கிடைக்குமா? அதச் சொல்லு..." "சொல்லுறேன்... நம்முடைய ஊர் நடைமுறையக் கவனிச்சாலே, உலக நடைமுறை தெரியும். ஓங்கி வளர்ந்த பனைமரத்துல ஏறி, பயினியை இறக்குறது என்பது அபாரமான வேலை... பெருமைப்படக்கூடிய சாதனை. ஆனால் அந்தத் தொழிலை செய்பவனை பனையேறின்னு கேவலமாப் பேசுறோம். கிணற்றுக்குள் போய்... வெடி மருந்த வச்சி. பாறையை பிளக்கிறது... எல்லாராலும் செய்யமுடியாத வேலை... அந்த வேலயச் செய்பவனை கேவலமாய் நினைக்கோம்... அந்த வேலையைச் செய்பவன்ைவிட, அந்த வேலைக்கு காண்ராக்ட் எடுக்கிறவன் பெரிய மனுஷனாயிட்டான்... இதுமாதிரி... அழுக்கை எடுத்துட்டு... சுத்தத்தைக் கொடுக்கிற வேலை சலவையாளர் வேலை... அவங்கள வண்ணான்னு கொத்தடிமையாய் வச்சிருக்கோம். பண்ணை நிலத்துல... அல்லும் பகலும் வேலை செய்யுறவனை... பறையன்னு தள்ளி வச்சிட்டோம். இப்படிக் கஷ்டமான வேலைகள் செய்றவங்களை கேவலப்படுத்தி... அந்தத் தொழில்களையே