பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 42 ஊருக்குள் ஒரு புரட்சி கேவலமாக்கிட்டோம். ஏழைகள், கோழைகளாய் இருக்கும் வரை ஏய்ப்பவர்கள் தான் மேய்ப்பவர்களாய் இருப்பாங்க..." "மேய்ப்பவங்களை என்ன செய்யணுன்னு சொல்லுற" என்றார் இடும்பன். "சொல்லுறேன்... நம்ம சமுதாயத்துல. உழைப்பவன்... மேய்ப்பவன் என்கிற பிரிவோட இன்னொரு பிரிவு இருக்கு... இது அதிகார வர்க்கம். நிலப்பிரபுத்துவ ஆணவமும், முதலாளித்துவ கபடமும் கொண்ட இந்த அதிகாரவர்க்கந்தான். சமூக சமத்துவத்தின் முதல் எதிரி... ஒரு கலெக்டர் முன்னால் கிளார்க் நீங்கன்னு சொல்லக் கூடாது. கலெக்டர் சொன்னார்னுதான் கலெக்டர்கிட்டேயே சொல்லணும். இந்த மாதிரி கொத்தடிமைத்தனத்தை சங்கிலித் தொடராய்க் கொண்ட நிர்வாக அமைப்பில், சமூகத்தில் பணக்காரன் பணக்காரனாய் ஆகிறான். ஏழை ஏழையாகிறான். இதனால் நாடு முன்னேறலன்னு நான் சொல்லல... சுதந்திரத்திற்குப் பிறகு எவ்வளவோ முன்னேறி இருக்கோம். இதே ஆண்டி... இன்னைக்கு... போலீஸ் ஸ்டேஷனே நடுங்கும்படி புரட்சி செய்ய முடியுதுன்னால்... அது நாட்டோட முன்னேற்றம். இதே ஆண்டி. . இருபது வருஷத்துக்கு முன்னால... இப்படிச் செய்திருந்தால், அவன் போன இடம் புல்லு முளைச்சிருக்கும்... ஆக நாடு நல்லா முன்னேறியிருக்கு... அதே சமயம் நாடு முன்னேறிய அளவுக்கு நம்மள மாதுரி ஏழைகள் முன்னேறல... பஸ்ஸுல போன கோபாலை வழிமடக்கி, மதுரையில் லாக்கப்பில் அடைக்கிற காலம் போகல. அதே சமயம் அவனை என்னை மாதுரி ஒரு பறப்பையன்..." "ஏ... அப்டியெல்லாம் சொல்லாதப்பா..." "என்னை மாதுரி சாதாரணமானவன் மீட்கிற அளவுக்கு காலம் வந்திருக்கு... சமூக சமத்துவத்துக்காக சர்க்கார்-நிலச் சீர்திருத்த சட்டம் வந்தது. ஆனால் எல்லோரும் பினாமி பேர்ல எழுதி வச்சிருக்காங்க... நமக்கு வந்த மாடுங்க... அவங்க வீட்ல மேயுது... நாம கையைக் கட்டிக்கிட்டு சும்மா இருக்கோம். ஒரு நிகழ்ச்சிதான் ஞாபகம் வருது... கரும்புத் தோட்டத்துக்காரங்க.. குரங்குகள், தோட்டத்தை அழிக்காமல் இருக்க, மூங்கில் கம்புகளைச் செதுக்கி, மிளகாய் சோற்றைச் செய்து. ஒரு பாறையில வப்பாங்க.. கரும்பத்தின்ன வருகிற குரங்குங்க... இடையில இருக்கிற மிளகாய் சோற்றைத் தின்னுட்டு. அப்புறம் எரிசசல் தாங்க முடியாமல்... மூங்கில் கம்புகளை எடுத்து ஒன்றை ஒன்று அடிச்சிக்கிடும்... கரும்புத் தோட்டம் பத்திரமாய் இருக்கும். இதுமாதிரி நாம் வறுமை என்கிற மிளகாய்ச் சோற்றைச் சாப்பிட்டு, வகுப்புவாதம், மொழி, ஜாதி முதலிய கம்புகளை வைத்து அடிச்சிக்கிடுறோம்... நமக்குச் சேர வேண்டிய கரும்புத்தோட்டம் பத்திரமாய் இருக்கு." "நாம தோட்டத்துக்குள்ள இறங்கணும். கரும்புகளை ஒடிக்கணும்... அதுக்கு வழியச் சொல்லு..."