பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 52 ஊருக்குள் ஒரு புரட்சி சின்னான் கோபாலை கையமர்த்தினான். கூட்டுறவுத் தலைவர் உடம்பெல்லாம் நடுங்கியது. மார்கழிக் குளிரிலும், உடம்பு வியர்க்க வெலவெலத்து நின்றார். உயிர், இப்போது 'பினாமி மாதிரி, ஒட்டியும் ஒட்டாமலும் நிற்பதுபோல், சவக்களை படர, தவளை மாதிரி தலையைத் தூக்கிப் பார்த்தார். முடியவில்லை. சின்னான், அமைதியாகப் பேசினான்: "சரி... ஒம்மச் சொல்லிக் குற்றமில்ல. கண்ணுமுன்னால... பல கூட்டுறவுச் சங்கத்த மோசடி பண்ணுனவங்க... பளபளக்கிற கார்ல போறதப் பார்த்த நீரு... கஸ்டம்ஸ்ல இருந்து வந்த துணிகள... பெண்டு பிள்ளியளுக்கு கொடுத்ததுலயோ... சர்க்கரய... தென்காசியிலேயே வித்ததுலயோ... தப்பில்ல... தப்பு எங்க மேலத்தான். ஸ்டாக் ரிஜிஸ்டர் இருக்காவே? சர்க்கரை மூட்டை இருப்பு எவ்வளவு இருக்கணும்? ரிஜிஸ்டர்ல. இருக்கிறபடி இருக்கா?" "பரமசிவம் வீட்டுக் கல்யாண வகைக்காவ..." "ஆயிரம் இழவுல ஒரு கல்யாணத்த நடத்துறவங்க கூட, இன்னும் நீரு சேரப் போறிரா?" "சாமி சத்தியமா மாட்டேன்..." "சரி. அப்படின்னா... கூட்டத்துக்கு முன்னால நடயும். பேரேட்ட வச்சிக்கிடும். ஒவ்வொருவனும்... எத எத, யாா யாா போல வாங்கியிருக்கான்னு சொல்லணும். சொல்லுவிரா?" "சொலலாட்டா... காலுல கிடக்கிறத தூக்கி தலயில அடி..." "இவன் சொன்னாலும் அடிக்கணும்... சொல்லாட்டாலும் அடிக்கணும்..." "நம்ம வாயில இருந்து இந்த மாதிரி வார்த்த வரப்படாது... சரி... நடயும்..." கூட்டுறவுச் சங்கத் தலைவர் - பலருக்கு. பல மாடுகளை ஏழைகள் பேரில் வாங்கிக் கொடுத்தவா, இப்போது மாடு மாதிரி முன்னால நடந்தார். வேகமா நடயும்வே...' என்று கூட்டம், ஒரே குரலில் சொல்ல, அவரும் ஒரே காலில் நடப்பவர்போல் ஓடினாா. கூட்டம் போய்க் கொண்டிருந்தபோது, ஒவர்ஸியருடன், வேகமாக நடந்து கொண்டிருந்த மாசானம், திரும்பிப் பார்த்துவிட்டு, திடுக்கிட்டுப் பார்த்துவிட்டு, ஒடப்போனார். அவரால் முன்பு உதைபட்ட பிச்சாண்டி கையில் ஒரு பெரிய கல்லைத் தூக்கி வைத்துக் கொண்டு, "ஏல... ரெண்டு பயலுவளும் மரியாதியா நில்லுங்க... இல்லன்னா இந்தக் கல்லால ஒரே போடு..." என்று சொலலிவிட்டு, கையைக் கிரிக்கெட் ஆட்டக்காரன் மாதிரி தூக்கியபோது, மாசானமும், பஞ்சாயத்து யூனியன் ஒவர்லியரும், அந்தக் கல், தலைக்குமேல் போகட்டும் என்பதுபோல் குனிந்து கொண்டே நின்றார்கள். கூட்டம் அங்கே போவது வரைக்கும். மண் நோக்கி நின்றார்கள்; புலியைப் பார்த்ததும், ஒட நினைத்தும், ஒட முடியாமல்,