பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 153 அப்படியே குன்றிப் போய் நிற்கும் ஒட்டகம் மாதிரி! கோபால், ஒவர்லியரை அதட்டினான்: "கையில என்னதுய்யா..." "எம் புக்... யூனியன் ரோடுகளப் பற்றிய கணக்கு..." "அது எனக்குத் தெரியும்... இப்டிக் கொடுங்க..." கோபால் ஒவர்லியர் கொடுத்த 'எம் புக்கைப் புரட்டிப் பார்த்தான். "ஆமாம். சேரிலரோடு போட்டதா எழுதியிருக்கு... எப்பய்யா போட்டி யரு...? குளத்துப் பக்கத்துல கல்வெர்ட் கட்டுனதா இருக்கு... எப்போய்யா போட்டியரு...? நீரு கெட்டிக்காரன். பேப்பர்ல ரோடு போடுறதுல... ஒங்கள மிஞ்ச முடியாது போலுக்கே... அவனவன், போட்ட ரோட்ல... கொஞ்சம் மாற்றி எழுதி அட்ஜெஸ்ட் பண்ணுவான். நீ போடாமலே எழுதிட்ட... உண்மையிலேயே நீ ஸ்பெஷலிஸ்டுய்யா... சீ. நீயில்லாம்..." காத்தாயி கத்தினாள்: "ஒவர்லியர் எஜமான்... எங்க சேரில ரோடு போட இடமே இல்ல... இல்லாத இடத்துல... ஒம்மால எப்டி ரோடு போட முடிஞ்சது...? இப்படி ஏழை எளியவங்க வரிப் பணத்துல வாழ்றதவிட... நீரு... ஒம்ம பெண்டாட்டிய கூட்டிக்கொடுத்துப் பிழைக்கலாம் எசமான்... வழி தெரியாத ஜனங்களுக்கு. நீரு வழிபோட்டு நல்லாத்தான் வழி காட்டியிருக்கியரு... அய்யா... நம்ம சேரில வந்து, பாவம் கஷ்டப்பட்டு. மாசானம் மவராசன் போட்ட ரோட்ட அளந்து பாத்திருக்காரு பாருங்க... ஏய் சின்னான்... சாமிக்கு ஒரு கலர் உடச்சி கொடு. து... எங்களுக்கு நல்லது பண்ணக்கூட வேண்டாம். நல்லது பண்ணுனதாச் சொல்லாமலாவது இருக்கப்படாதா...?? ஓவர்ஸியர் தலைகவிழ்ந்து நின்றார். அவர் போட்டிருந்த டெர்லின் சட்டையும், டபுள் நெட் பேண்டும், தனியாகக் கழன்று விழுந்து நிர்வாணமாக நிற்பதுபோல் தலைகவிழ்ந்து நின்றார். மாசானம் கொடுத்த பணத்தில் வாங்கிய ஆடைகள், அவரது மானத்தை மறைக்க முடியாமல் வியர்வையை உறிஞ்சி, உப்பின. கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி, தூக்குக் கயிறுபோல் அழுத்தியது. சின்னான், வெறுமையோடு பேசினான்: "நானும். போனவாரம் வரைக்கும் கவர்மென்ட் செர்வண்ட்தான் ஸ்ார்... நமக்கு சம்பளம் குறைவுன்னாலும். அரசாங்கம் நம்மை நம்பி. லட்சக்கணக்கான பணத்த... நம்ம பொறுப்புல கொடுத்திருக்கு... நாமதான் சேவை செய்யத் தகுதியானவங்கன்னு நாம படிச்சிருக்க படிப்பை நம்பி... பொறுப்பை கொடுக்குது. சர்க்கார் என்கிறது ஏதோ ஒரு ஸ்தாபனம் அல்ல. அது நாலரைக் கோடி தமிழ் மக்கள்... அறுபதுகோடி இந்திய மக்கள்... இந்த அறுபது கோடி மக்களோட பணத்துல. நாம ஒரு காக எடுத்தாலும்... அது நம்ம பெண்டு பிள்ளைகள அறுபதுகோடி பேருக்கும் கூட்டிக் கொடுக்கதுக்குச் சமானம்.