பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 54 ஊருக்குள் ஒரு புரட்சி இப்ப ஒம்ம போலீஸ்ல ஒப்படைச்சிடலாம். ஒம்ம குடும்பந்தான் நடுத்தெருவுல நிக்கும். ஒம்ம இடத்துக்கு ஒரு யோக்கியன் வந்தாலும் ஒரு மாதத்துல அயோக்கியனாயிடுவான். தனிப்பட்ட சொத்துரிமை இருக்கதுவரைக்கும் இந்த மாதிரி அதிகாரிகள்தான் இருப்பாங்க. ஒவ்வொருவனும்... தன் தகுதிக்கு ஏற்றாற்போல ஒரு அரசியல்வாதிய பைக்குள்ள போட்டுக்குவான். அதிகாரி... அரசியல்வாதி பைக்குள்ள வும், அரசியல்வாதி அதிகாரி பைக்குள்ளயுமாய் இருந்துக்கிட்டு, அரசாங்க பைக்குள்ள கையைப் போடுற காலம்... ஒங்கள மாதிரி ஆட்களுக்குத்தான் மேல் அதிகாரிங்க கிட்டயும் நல்ல பேரு கிடைக்கும். நீங்கதான். இஷ்டமான இடத்துக்கு, இஷ்டமான சமயத்துக்குப் போக முடியும். சரி... எதுக்காவ அழுகிறீங்க? அப்படியே அழுதாலும். இந்த சமூக அமைப்புக்காக அழும்... நாங்க ஒம்ம அடிக்க மாட்டோம்... அழாதேயும்..." ஆண்டி குறுக்கிட்டான்: "இவனுவ, அடிச்சா வலிக்குமேன்னுதான் அழுவாங்களே தவிர, மானம் போகுதேன்னு அழ மாட்டாங்க... மானங்கெட்ட பயலுவ..." "பொதுப் பணத்த ஒருவன் அபகரிக்கும்போது. ஒவ்வொரு பிரஜையும். தன் சொந்தப் பணம் போறது மாதிரி துடிச்சா இந்த மாதிரி நடக்காது. அப்படி எவனும் துடிக்கவும் இல்ல... துடிக்கவும் மாட்டான்... ஏன்னா... பொது வாழ்க்கை வேறு... சொந்த வாழ்க்கை வேறு என்று இரண்டு நிலை இருக்கது வரைக்கும், ரெட்டை வேடமும் ரெண்டுங் கெட்டான் வேடமும் இருக்கத்தான் செய்யும்... யோவ் மாசானம்... இவருக்குக் காசு கொடுக்கதுக்காக கூட்டுறவுச் சங்கப் பணத்த வாங்கியிருக்கியரே... நியாயமாய்யா..." மாசானம், சமாளித்துக் கொண்டே பேசினார். "தப்புத்தான்... ஆனால்... ரெண்டு கை தட்டினால்தான... ஒசை கிடைக்கும்..." "எந்த ஒசையில சொல்றீரு..." "இதை வெளிப்படையா சொல்லணுமா? ..." "உதை வேண்டாமுன்னால் சொல்லும். பொதுப பணத்த எடுக்கது அயோக்கியத்தனம் தெரியுமா..." "வட்டிக்கு விடுறது?" "என்னய்யா சொல்லுத?" "கூட்டுறவுத் தலைவர் கம்மாத் தரல... வட்டிக்குத்தான் தந்தார்... ஐயேஞ்சு இருபத்தஞ்சு ரூபாய எடுத்துக் கிட்டுத்தான் தந்தாரு..." எல்லோரும், கூட்டுறவுத் தலைவரைப் பார்த்தார்கள். அவா பல்லைக் கடித்துக் கொண்டே "இவன்-பிச்சாண்டி பேர்ல போன வருஷத்துக்கு முந்தின வருஷம் ஒரு கறவ மாடு வாங்கினான்" என்றார் பிச்சாண்டி துள்ளினான்: "ஒப்பன உதைக்கிற பயல... என் மாட்டத் தாlயா .. இல்ல ஒன்