பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 1 5.5 கழுத்துல கயிறு கட்டி. என் வீட்டுத் தொழுவுல கட்டட்டுமா..." மாசானம், அறுக்கப்போகிற ஆடு மாதிரி விழித்தார். அதே அந்த ஆடு கூட்டுறவுத் தலைவரை. ஒநாய் மாதிரியும் பார்த்தது. முத்துக்கருப்பன் கத்தினான். கையை ஓங்கினான். "என்னை... போலீஸ் பிடிச்சதா புரளிய கிளப்பி விட்டிருக்கியே... நீ உருப்படுவியா..." சின்னான். மீண்டும் அமைதியாகப் பேசினான்: "அடிபட வேண்டியது மாசானம் அல்ல; அவனைப் போன்றவர்களை உருவாக்கும் சமூக அமைப்பே." "சரி... சரி... நீரு... அந்த மாட்டை பிச்சாண்டி கிட்ட கொடுத்துடும்..." சின்னானின் அமைதியான வார்த்தைகளுக்குப் பின்னால் தர்ம அடி ரெஸ்ட எடுத்துக்கொண்டிருப்பதைப் புரிந்து கொண்ட மாசானம், விடுவிடென்று நடந்தார். கூட்டம் அவர் பின்னால் நடந்தது. ஒவர்ஸியர் மட்டும் அங்கேயே நின்றார். கோபால் கையிலுள்ள எம் புக்கை எம் புக்கு என்று சொல்ல முடியாமல், நின்ற இடத்திலேயே நின்றபோது, கூட்டம் அவரைக் கண்டுங் காணாமல் நகர்ந்தது. மாசானம், தொழுவில் கட்டியிருந்த, கறவை மாட்டை அவிழ்த்து பிச்சாண்டியிடம் நீட்ட, அவன்"என் தொழுவுல கட்டுவே" என்று சொல்ல, அவன் மனைவி, இடையில் ஏதாவது நடந்து, வலிய வந்த மாடு போய் விடக் கூடாது என்ற பயத்தில், "கம்மா கிடயுமே... ஒரு மனுஷன ஒரேயடியாய்யா அவமானப்படுத்துறது" என்று சொல்லிக் கொண்டே மாட்டை வாங்கிக் கொண்டாள். "இவன் என்னை தென்னை மரத்துல கடடிவச்சத மறந்துட்டியாடி?" "இவன் ஒரு பொட்டத் தென்னை... இப்பதான் நல்லா அனுபவிக்கான்'... கட்டையில போறவன விட்டுத் தொலையும்..." பிச்சாண்டி விட்டுத் தொலைக்கவில்லை. இடும்பன் சாமியையும், இன்னும் இரண்டு பேர்களையும் கூட்டிக் கொண்டு, மாசானம் வீட்டுக்குள் போய், பத்து நெல் மூட்டைகளை முதுகில் வைத்துத் தூக்கி, கூட்டத்தின் மத்தியில் போட்டான், ஆளுக்கொருவராய் நெல்மூட்டைகளைத் தூக்கி, அருகே இருந்த இடும்பன் சாமியின் வீட்டில் போட்டுவிட்டு. சின்னத்துரை வீட்டைப் பார்த்துப் போனார்கள். அந்த வீட்டிற்கு அடுத்த வீட்டுக்காரியான கண்ணாடி ஆசிரியை, சிலுவைக் குறியைத் தூக்கி, ஜீசஸுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே, கூட்டத்தில் சேர்ந்தாள். கூட்டம் மானேஜர் ஜம்புலிங்கப் பயலை, கவனிக்காமலா இருக்கும்! சின்னத்துரையின் வீட்டு முன்னால் கூட்டம் ஒட்டு மொத்தமாக நின்ற போது, உள்ளே குளித்துக் கொண்டிருந்த பிணவியாபாரி ஈரத்துண்டை கட்டிக் கொண்டே வந்தார். சின்னான், ஆவேசமாகப் பேசினான்: "ஒம்மக்கிட்ட பேசிக்கிட்டு நிற்க நேரமில்ல. நயினாரம்மாவுக்கும். மூக்கையா பெண்டாட்டிக்கும், மொத்தம் ஆறாயிரம் ரூபாய் வேணும்...