பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 5 6 ஊருக்குள் ஒரு புரட்சி கொண்டு வந்து தாlரா... நாங்களே எடுத்துக்கட்டுமா... கொஞ்சம் பொறுங்கப்பா... அவரு விவேகி... வெட்டு விழுமுன்னு தெரியும்..." சின்னத்துரை பிரமைபிடித்து நின்றபோது "போய் எடுத்துக்கிட்டு வாரும்வே"... என்று சொல்லிக் கொண்டே, முனியாண்டி அவரைத் தள்ளினான். "அவரு செஞ்சதெல்லாம் தப்புத்தான்... நான் தாரேன்..." உள்ளே இருந்து சத்தங்கொடுத்த அவர் மனைவி, பணத்தோடு வந் தாள். சின்னான் வாங்கிக் கொண்டே, சின்னத்துரையை அதட்டினான்: "ஒம்மோட செலல மகன் குமாரை எங்கவே... அந்த மாபெரும் தலைவரை நான் இப்போ பார்க்கணும்." தாய்க்காரி கெஞ்சினாள். சின்னத்துரை, பிரமையில் இருந்து விடுபடவிலலை. "சின்னான்... ஒன்கிடட பிச்சை கேக்கேன்... புத்தி கெட்ட பய... என் முகத்துக்காவ..." "கவலபபடாதிங்கம்மா... நாங்க... எங்களைக் காக்குற கூட்டமே தவிர, தாக்குற கூடடமிலல... என் அம்மாவ மாதிரித்தான். நீங்களும் அவனைப் பெத்து வளாததிருபபீங்கன்னு தெரியும்." சின்னத்துரையின் மனைவி கையெடுத்துக் கும்பிட்ட போது, கூட்டம் நகர்ந்தது. மாசானமும், கூடடுறவுத் தலைவரும் கூட்டத்தின் முன்னால் வருவதைய பாாத்துப் புரிந்து கொண்ட பண்ணையார்கள். ஜனசக்தியின் வெப்பம் தாங்க மாட்டாதவாகளாய் தத்தம் வீடுகளில் உள்ள பினாமி" விவசாயக் கருவிகளை எடுத்துக் கொண்டு. தயாராக இருந்தார்கள். கூட் டுறவுத் தலைவா, ஒவ்வொருவர் வீட்டு முன்னாலும் நின்று, "இவன் வீட்ல குப்பனோட மாடு இருக்கு... ராம துரையோட குதிரு இருக்கு" என்று படிப் பதும், உடனே சம்பந்தப்பட்டவர்கள், குறிப்பிட்ட பொருட்களையும் மாடு களையும், தானாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். இப்படி ஒவ்வொரு வீட்டு முன்னால் தலைவர் படிப்பதைக் கேட்கவும், பண்ணையார்கள் கொண்டுவந்து போடுவதைப் பார்க்கவும், கூடடத்திற்கு ரம்மியமாக இருந் தது. சிலர் அவசரத்தில் தங்கள் நிஜப் பெயருக்கு வாங்கிய போஸ்கலப்பை களைக்கூட கொண்டுவந்து போட்டார்கள். கூட்டத்திலிருந்தவர்களில் ப்லர். தாங்கள் ஒரு நாள் ராஜாவாக இருந்து ஆட்சி செய்த கறவை மாடு களையும், உழவு மாடுகளையும், தாங்களே அவிழ்த்துக் கொண்டார்கள். அவ்வளவு பெரிய கூட்டமும், சின்ன சத்தங்கூட இல்லாமல், அசுரத்தனமான அமைதியோடும், கறவை மாடுகளுடனும், விவசாயக் கருவிகளுடனும், பழைய பஞ்சாயத்து பரமசிவத்தின் வீட்டின் முன்னால் வந்து நின்றது. பழைய காலத்துக் கட்டிடம். உறுதியாக இருந்தது. நாலைந்து படிகள் சாய்வாக ஏறித்தான் கதவுப் பக்கம் போகலாம். கூட்டுறவுச் சங்கத் தலைவர் மட்டும். படியேறி, வாசல் கதவைத் தட்டிக் கொண்டே "பரமசிவம்... நம்ம காலம் முடிஞ்சிட்டு. இன்னும் நாம