பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 ஊருக்குள் ஒரு புரட்சி "ஆயிரம் செய்தாலும் அவரு நம்ம தாய்மாம அண்ணாச்சி. அய்யாவுக்கு அய்யாவா நம்ம வளர்த்தவரு அண்ணாச்சி. தோளுல தூக்கி வச்சு து.ாங்க வச்சவரு அண்ணாச்சி. அவர வெட்டுமுன்ன... என்ன வெட்டு அண்ணாச்சி" ஏழைப் பெண்களுக்கு, தாங்கொண்னா சோகம் வரும்போது, ஒப்பாரி பிறக்கிறது. அந்த ஒப்பாரியே ஒரு காவியம் போல் வருகிறது. தாளநயங்கெட்ட வாழ்க்கையில் சலித்துப் போய், சோகத்துள் மூழ்கடிக்கப் படும் போது, அவலம் பாட்டாகவும், அந்தப் பாட்டு ஆன்மாவின் வெளிப்பாடாகவும் ஆகிவிடுகிறது. தாளம், தானாகப் பிறக்கிறது. மீனாட்சியின் ஒப்பாரியில் ஆன்மா பேசியிருக்க வேண்டும். அங்கே இழவு விழவில்லை. மீனாட்சி, மேலும் மேலும் ஒப்பாரி வைக்க வைக்க ஆண்டியப்பனின் அரிவாள் கரம், வேறு பக்கமாக விழுந்து கொண்டிருந் தது. இளமையில் தாய் தந்தையரை இழந்த பிறகு, தாய்க்குத் தாயாய், தந்தைக்குத் தந்தையாய், தோளிலே தூக்கி வளர்த்த மாமா முன்னே வந்தார். மேலத்தெரு ராமையா சிறுவனாக இருந்த இவன்ை ஏதோ ஒரு காரணத்திற்காக அடிக்க, அந்த ராமையாவை, அரிவாளை வைத்துக் கொண்டே ஓடஒடத் துரத்திய அடைக்கலசாமி முன்னால் வந்து சிரித்தார். இந்தச் சமயத்தில், பசுமாட்டை பூரணமாக அவிழ்த்து விட்ட அடைக்கலசாமி, உட்கார்ந்து கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தார். அவன் கையரிவாளைப் பார்த்துக் கொண்டே "ஏமுல... நின்னுட்ட? வெட்டுல... ஒரேயடியாய் வெட்டுல... நீ... பெரிய மனுஷங்களப் பகைச்சிட்டு, அதனால படப்போற கஷ்டத்தப் பார்க்காமலே... நான் ஒன் கையாலயே... சாவுறேன்... வெட்டுடா... வெட்டு" என்றார். ஆண்டியப்பன் தடுமாறிக் கொண்டிருந்தபோது, மீனாட்சி 'அம்மா சாவும்போது, எங்கள... ஒம்ம கையில ஒப்படைச்சத மறந்திட்டீரே மாமா... எங்கள அனாதயா விட்டுட்டிரே மாமா... நேத்துகூட... என் வாயில, சோத்த உருட்டிப் போட்டுக்கிட்டே... என் தலையை கோதிவிட்ட மாமாவே... இப்போ... எங்க வாயில... மண்ணள்ளி போடுறீரே... மாட்டப் பிடிக்கது நியாயமா...?" என்று சொல்லிக் கொண்டே அழுதபோது, ஆண்டியப்பனுக்கு மீண்டும் கோபம் வந்தது. இதற்குள், காத்தாயி, ஆண்டியின் மோவாயைப் பிடித்துக் கெஞ்சிக் கொண்டே "ஆண்டி மவராசா... நான் சொல்லுதத கேளும் ராசா. இது காலத்தோட கோலம்... ஒம்ம மாமா வெறும் அம்பு தான்... அத எய்தவரு பரமசிவம். அவரு மாட்ட மவராசனா, புண்ணியவான் கொண்டு