பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 ஊருக்குள் ஒரு புரட்சி ஆண்டி, சிறிது பெருமைப்பட்டுக் கொண்டான். பிறகு, அவர்களுடன் தோழமையுடன் பேசினான்: "நீங்க... இருக்கும்போது நான் எதுக்காவ கவலப்படனும்... மீசக்காரன் மாட்ட பிடிச்சிக்கிட்டு போவும் போது... அரிவாள எடுத்து ஒரே வெட்டா வெட்டணுமுன்னு நினைச்சேன்... ஆனால்... நீங்க... குறுஞ்சிரிப்பா சிரிச்சிக்கிட்டு நிக்கத பாத்ததும். ஏதோ விஷயம் இருக்குன்னு தெரிஞ்சு போச்சு..." மாசானம், குறுக்கே புகுந்தார். “வந்த பயலுவ... என் ஒத்த விரலுக்குப் பெறுவானுவளா..? குட்டாம்பட்டி மக்கடையில... நாலு பேர... தனியா நின்னு சமாளிச்ச ஆளுடா நான்... இவங்கள... ஒரு அடியில விழத்தட்டிட்டு... மாட்ட... ஒன்கிட்ட கொடுக்க எவ்வளவு நேரம் ஆவும் ஏன் சின்னய்யா... செய்யல...? அங்கதான் விஷயம் இருக்கு எதிரி தப்புப் பண்ணும் போது...அவன... அந்தத் தப்ப பண்ணவிடணும்... ஒரு தப்புக்கு ஒம்பது தப்பு செய்யவிடணும். அப்புறம் ஒரே போடு. ஆளு எழுந்திருக்கப் படாது..." இன்னும், எட்டுத் தப்புக்கள் நடந்தால்தான். தனக்கு மாடு கிடைக்குமோ என்று சந்தேகப்பட்ட ஆண்டியப்பனுக்கு. பொறுக்க முடியவில்லை. வாய்விட்டே கேட்டான்: "சரி... இனும என்ன பண்ணனும்... அதைச் சொல்லுங்க..." "அதத்தான். சின்னய்யா... சொல்லப்போனேன்... நாம சட்டப்படி என்னெல்லாம் செய்யனுமோ... அதச் செய்யுவோம். அதுக்கும் முடியாட்டா... சின்னய்யாகிட்ட இருக்கவே இருக்கு வேல் கம்பு. ஒரே குத்து..." இதற்குள் கையில் சில நோட்டுப் புத்தகங்களை வைத்திருந்த, என்ஜினியரிங் டிப்ளமாக்காரனான கோபால் "நம்ம... இளைஞர் நற்பணி மன்றத்துக்கு... மாணிக்கம் தலைவராக இருக்கணும்... நான்... செயலாளரு... இவன் ரவி... பொருளாளரு... மற்றவங்க எல்லாம் கமிட்டி மெம்பருங்க... தீர்மானம் போட்டாச்சு... இதுல ஒரு கையெழுத்துப் போடு" என்றான். ஆண்டியப்பனுக்கு бтrfl:Bogosofтбот எரிச்சல். கையெழுத்துப் போடுவதற்கு இதுவா நேரம்? எனன செய்ய... இவங்கள வச்சுதான், போன மாட்ட மீட்கணும்... ஆண்டியப்பன் மன்றக் குறிப்பேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு, "சரி... இப்ப என்ன செய்யலாம்..." என்றான். “முதல்ல. கூட்டுறவு சங்கத்துல போயி... சொல்லுவோம். அப்புறம் 'மாடு திருடி பரமசிவமே. இனிமேல் நீ ஒட்டு திருட முடியாதுன்னு சுவர்ல, வாதமடக்கி இலையை வச்சி எழுதலாம்..."