பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 43 சப்-இன்ஸ்பெக்டர் சினந்து பேசினார். "நான் உங்களை வாச்' பண்ணிக்கிட்டுதான் வாரேன். அன்றைக்குப் பொதுக்கூட்டத்தில் கலாட்டா பண்ணப் போனிங்க. இப்போ... இங்கேயே கலாட்டா பண்ன வந்திருக்கிங்க... எல்லாம் என் தப்புத்தான்" என்று அவர் சட்டயர் செய்த போது மாணிக்கமும், மற்றவர்களும் தப்புச் செய்தவர்கள் போல் மருவிய போது, ராமதுரை என்ற இ. ந. வாலிபன், "சார்! ஊர்ல வந்து நடந்ததை விசாரியுங்க... அப்புறமாய் வேணுமுன்னால்... இவனை என்ன வேணு முன்னாலும் பண்ணுங்க... எங்க பேர்ல தப்புன்னு தெரிய வந்தால், செருப்பை வைத்து வேணுமுன்னாலும் எங்கள அடியுங்க" என்று சொன்னபோது சப்-இன்ஸ்பெக்டர் அமைதியாகக் கேட்டார். "ஒங்க பேரு...?" "ராமதுரை சார்..." "என்ன வேலை பாக்குறே?" "கவர்மென்ட் செர்வண்ட்..." "ஓ! அந்த தைரியமா... ஒங்க... டிபார்ட்மென்ட் பெயரைச் சொல் லுங்க... உங்களுக்கு இன்னைக்கே ஒரு ரிப்போர்ட் அனுப்பிடுறேன்..." ராமதுரை பயந்துவிட்டான்: 'சார்... எனக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு சார். இனிமேல் இந்த மாதிரி வம்பு தும்புக்குப் போக மாட்டேன் சார். சார். சார்..." என்று சொல்லிவிட்டு, அந்த போலீஸ் அதிகாரி புன்னகைத்தபோது, ஆசாமி வெளியேறி விட்டான். மிஞ்சாமலேயே மிஞ்சி இருந்தவர்களும் போகலாம் என்பதுபோல் சப்-இன்ஸ்பெக்டர் எழுந்து நின்று கொண்டே, தீர்மானமாகப் பேசினார்: "ஆல்ரைட்... ஒங்களமாதிரி வெட்டியாய் இருக்க எனக்கு நேரமில்ல... இவன் பேரு என்னடா... நீங்க சும்மா இருங்க... அவனே சொல்லட்டும். ஆண்டியா. ஆம். இந்த ஆண்டிப்பயல் செய்திருக்கது அட்டம்ப்ட் டு மர்டர். கொலை செய்வதற்கான ஹோமிசைட் முயற்சி... அதனால... இவனை இன்னும் இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ளே... மாஜிஸ்திரேட் முன்னால் ஆஜர் பண்ணப் போறோம். நீங்க... அங்க வந்து... மாதம் முந்நூறு ரூபாய்க்கு மேல வருமானம் உள்ள இரண்டு பொறுப்பான நபர்களைக் கொண்டு வந்து, ஜாமீன் கொடுத்து மீட்கலாம். இனிமேயாவ்து ஒழுங்கா இருங்க... நீங்கல்லாம் படிச்சவங்க... இது நம்ம நாடு... புண்ணிய பூமி. இதுக்காக உழைக்கனுமே தவிர, இப்படி உருப்படாமல் போகக் கூடாது. உங்களுக்கு, வேலைக்கு ஆர்டர் வரும்போது, நாங்கதான் உங்களைப்பற்றிய கேரெக்டர் வெரிபிகேஷனை செய்யணுங்கறதை மறந்திடாதீங்க... ஒ கே? கேன் கோ... டபுளப்..." இ. ந. இளைஞர்கள், ஆண்டியையே பார்க்க, அவன், தன் ஜெர்ஸி மாடு தன்னை எப்படிப் பார்த்ததோ, அப்படி அவர்களைப் பார்க்க, அந்த இளைஞர்கள் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்தவர்கள்போல,