பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஊருக்குள் ஒரு புரட்சி ஒருசேர வெளியேறினார்கள். கோபால் (இ. ந. செயலாளர் - என்ஜினியரிங் டிப்ளமா) மட்டும் "கவலைப் படாத ஆண்டி... ஒரு நொடில ஜாமீன் கொண்டு வாறோம்" என்று சொல்லிவிட்டு, தன் கண்ணிமை களைத் துடைத்துக் கொண்டே போனான். அவர்கள் போனதும், சப்-இன்ஸ்பெக்டர் "என்னடா... ஒன் மனசுல நினைச்சுக் கிட்டே?... ஒன்னை மாதிரி எத்தனை ரவுடிங்களை பாத்திருப்பேன்" என்று சொல்லிக் கொண்டே போய்விட்டார் எங்கோ... சப்-இன்ஸ்பெக்டர் போனதும், ஸ்டேஷனுக்கு தானே இன்சார்ஜ் என்று அறிமுகப்படுத்த விரும்பியது போல், ஹெட்கான்ஸ்டபிள் லாக்கப்பைத் திறந்து, உள்ளே வந்து, "சோமாரி. சோதாப் பயலே... அவனவன் இருக்கிற வேலையை கவனிக்க முடியாம துடிக்கிறான். நீ சட்டம் பேசிக்கிட்டு வந்துட்டியோ" என்று ரவுடி ஆண்டியப்பனைப் பார்த்து, லத்திக் கம்பை ஆட்டிக் கொண்டே சொன்னபோது, ஆண்டியும், சாகத் துணிந்த தைரியத்தில் பேசினான்: "நானும் சட்டம் பேசுற காலம் வருது சார். ஏழைங்க சட்டம் பேசுறதுக்கும், வக்கீல் சட்டம் பேசுறதுக்கும் ஒரு விதியாசம் இருக்கு சார்... ஒரு நோயாளி உலகத்துல உள்ள எல்லா மருந்துகளோட விவரத்தையும் தெரிஞ்சி வச்சிருந்தால் அந்த நோயாளிக்கு, எந்த டாக்டருடைய மருந்தும் பிரயோஜனப்படல்லன்னு அர்த்தம். இது மாதிரி தான். ஏழைங்க... நியாயத்த தேடி, அது கிடைக்கிறதுக்காக தேடுன முயற்சியில நியாயம் கிடைக்காட்டாலும் சட்டத்தைப் புரிஞ்சிக்கிறாங்க. உதாரணமா... என்னோட சொந்த மாடு, பட்டப் பகலுல பறிபோனதச் சொல்ல வந்தேன். இங்க வந்த பிறவு, மாடு கிடைக்கல்லன்னாலும், லாக்கப் கிடைச்சிருக்கு. அதோடு... கொலை செய்ய முயற்சிக்கிறவனை, இருபத்து நாலு மணி நேரத்துல மாஜிஸ்திரேட் முன்னால ஆஜர் படுத்தணும். யார் ஜாமீன் எடுக்கணும் என்கிற விவரமும் தெரிஞ்சிட்டு..." ஆண்டியப்பனை பேச்சால் பணிய வைக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட ஹெட்கான்ஸ்டபிள், லத்திக் கம்பைத் தூக்கியபோது, ஆண்டி "அடியுங்க சார்... பண்ணையாருங்க... என்னைக் கொல்லத்தான் போறாங்க... அது எனக்கு சம்மதமில்ல... என்ன மாதிரி... ஒரு ஏழை கையாலயே சாகணும் என்கிற ஆசையில சொல்றேன். பரவாயில்ல... இந்தத் தொழிலாளிய... போலீஸ் தொழிலாளியான நீங்களே கொல்லுங்க..." என்றான். ஹெட்கான்ஸ்டபிள் வாயடைத்துப் போனார். அவனையே வியப்போடு பார்த்த அந்தச் சிவப்புத் தொப்பி அணிந்த கறுப்பு மனிதர், அவனைப் பார்த்து "டி சாப்புடுறீயாடா...?" என்றார். எப்படியோ, இரவுப்பொழுது போய்விட்டது. அந்த அன்றக் குள்ளே தூங்காமலே தூங்கிய ஆண்டி தன்னோடு அடைபட்டுக் கிடந்த சைக்கிள் திருடிகள், பட்டைச் சாராய வகையறாக்களைப் பார்த்தான்.