பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஊருக்குள் ஒரு புரட்சி போனால், குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடக்கும் தங்கச்சிய போய்ப் பார்க்கலாமே... பாலில்லாமல் சாகக் கிடக்கும் குழந்தைக்கு ஏதாவது வழி பண்ணலாம்... தங்கம்மா முகத்தைப் பார்க்கலாம்... பழையபடியும்... கிணறு வெட்டவோ... மரம் வெட்டவோ போவலாம். மாமாவும் சந்தோஷப்பட்டு. அவர் கையாலேயே தங்கம்மாவை கைபிடித்துக் கொடுப்பார்... படித்தவனுகளே. பொறுப்பில்லாதபோது, படிக்காத நான் எதுக்கு வம்பை விலைகொடுத்து வாங்கணும்... கூடாது... கூடாது... படித்தவர்களால் உருப்படாமல் போன இந்த ஊரை. படிக்காதவங்களாலதான் முறைப்படுத்த முடியும். நான், என் சுயநலத்துக்காக, ஒரு லட்சியத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது. மகாத்மா காந்தி படாத கஷ்டமா... நான். என்னுடைய பூரண சுதந்தரத்தை அடமானம் வைத்து, இந்த அற்ப சுதந்திரத்தை வாங்க மாட்டேன். நான் குமார் இல்ல... நான் மனிதன். மனிதன்... அவன் வாயில் இருந்து வருவதையே, அப்போதைக்குத் தேவ வாக்காகக் கருதியவன்போல், இளைஞர் பெரும்பனி மன்றத் தலைவன் குமார். அவனை உற்றுப் பார்த்தபோது, ஆண்டியப்பன் திட்டவட்டமாகக் கூறினான். "நான் பதவிக்கும். பொண்ணுக்கும் ஆசப்படுறவன் இல்ல குமார். நான் நியாயத்துக்கு ஆசப்படுறவன். நீ பழகுன தோசத்துல கேட்டதுக்கு நன்றி. நீ உண்மையைத் தான் சொல்லியிருக்க... நீ என்கிட்ட பழகி. மாட்ட வச்சிக்கிடச் சொன்னதும், நான் உன்கிட்ட பழகி, உன்னை தலைவனாய் ஒத்துக்கிட்டதும் ஒரு தோசந்தான். ஒங்களால... என்ன பண்ணனுமோ அதப் பண்ணுங்க..." குமாரின் சிவப்பு முகம், ரத்தச் சிவப்பாகியது. அவனை எரிப்பதுபோல் பார்த்துக்கொண்டே, பரமசிவம் மாமா பக்கத்தில் போய் உட்கார்ந்தான். கான்ஸ்டபிள் கொண்டு வந்த கலர் பாட்டல்கள் காலியானதும், அவர்கள் போய்விட்டார்கள். "பெரியவங்க... சின்னல்வங்க என்கிற மரியாதை இல்லாமப் போயிட்டுது என்ன..." என்று சப்-இன்ஸ்பெக்டர், அவனைப் பார்த்து முறைத்துக் கேட்டார். முறைத்தவர், விறைத்து உட்கார்ந்தார். சின்னான், அங்கே அலட்சியமாக உள்ளே வந்து, அவர் சொல்லுமுன்னாலேயே ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். பிறகு ஆண்டியப்பனையும் லேசாகப் பார்த்துவிட்டு. மீண்டும் பார்வையை அலட்சியமாக விட்டான். அவன் வந்ததால் வழி கிடைத்ததாய் நினைத்த ஆண்டியப்பன், 'சினனான். நீயுமா... நீயுமா...' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு, வேறுபுறமாகத் திரும்பி, கண்களைத் துடைத்துக் கொண்டான்.