பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 6 சிப்-இன்ஸ்பெக்டருக்கு சின்னான் உட்கார்ந்த தோரணையும், பார்த்த விதமும், பயப்படாதவன் போல் கண்ணைச் சிமிட்டிய லாவகமும், கட்டோடு பிடிக்கவில்லை. ஆகையால் அவனைக் கண்டுக்காதது போல் ரைட்டர் எழுதி வைத்த ஏதோ ஒரு குறிப்பைப் படிப்பதுபோல பாசாங்கு செய்தார். மணியடித்த டெலிபோனை எடுத்து "டோண்ட் ஒர்ரி... நாலு நாளைக்கு லாக்கப்புல போட்டு, கையில காலுல விசாரிச்சா சரியாப் போயிடும்" என்று சொல்லிக் கொண்டே அவனை ஜாடை மாடையாகப் பார்த்தார். பத்து நிமிடம் போயிருக்கும். சின்னானால் பொறுமையாக இருக்க முடியவில்லை. "வரச் சொன்னிங்களாம். விஷயத்த சீக்கிரமாச் சொல்லலாமா? ஏன்னா நானும் பிஸி" என்றான் வினயமாக, சப்-இன்ஸ்பெக்டர். அவனை எரிச்சலாகப் பார்த்துக் கொண்டே "அன்றைக்கு மினிஸ்டர் கலந்துக்கிட்ட கூட்டத்தில் புகுந்து, சின்னப் பையங்களை அதட்டிக் கூட்டிக்கிட்டுப் போனது அனாவசியமான ஒரு சட்ட-ஒழுங்குப் பிரச்சினை. அப்பவே, நான் ஒங்களை அரெஸ்ட் பண்ணியிருக்கலாம். படிச்சவராச்சேன்னு செய்யல... அண்டர் ஸ்டாண்ட் எச்சரிக்கை செய்யறதுக்காகக் கூப்பிட்டேன்" என்றார். "பொய்! என்னை அரெஸ்ட் பண்ணினால், சேரிக்காரங்க... உங்க பாணியில சொல்லப்போனால், இந்தப் பறப்பய பிள்ளைகள், இங்க வந்துடுவாங்கன்னு பயம். இதனால... நீங்க எங்கேயாவது போக வேண்டியதிருக்குமோ என்கிற பயம்." "யூ ஆர் எக்ஸிடிங் யுவர் லிமிட்." "லிமிட் மீறி போகிறவங்களுக்கு, லிமிட்டுக்குள்ள இருந்து பதில் சொல்ல முடியாது. போலீஸ் ஸ்டேஷன். ஒரு சமூக ஸ்தாபனம், ஒங்கள் பிரைவேட் லிமிடெட் ஸ்தாபனம் இல்ல." "இந்தா பாருங்க மிஸ்டர். அதிகப் பிரசங்கித்தனம் வேண்டாம். நீங்க ஒரு வகுப்புவாதியாய் மாறுறது உங்களுக்கே நல்லதுல்ல." "ஏழை ஹரிஜனப் பையங்களுக்கு, தாழ்வு மனப்பான்மை வரக்கூடாதுன்னும், அவங்க, ஏமாத்துப் பேர்வழிகளுக்கு பகடைக் காயாய் மாறக்கூடாதுன்னு நினைத்தும் என் பிள்ளைங்களை, நான் கூட்டிட்டுப் போறது வகுப்பு வாதம். அதே கூட்டத்துல ஜாதிப் பையன்களை, ஏழைப் பையன்களா ஜோடிச்சது என்ன வாதம்? எங்க பையன்கள போல, ஜாதிப் பையன்களுக்கு சீருடை கொடுத்த மோசடியைப் பற்றி, இப்பவே ஒரு கம்ளெயிண்ட் கொடுக்கேன். ஒங்களால ஆக்ஷன் எடுக்க முடியுமா?" "அது அரசியல் பிரச்சினை." "பிறகு என்கிட்ட பேச, உங்களுக்கு என்ன யோக்கியத இருக்கு?"