பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதுடன் புதிய படைப் பிலக்கியங்களையும் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. வளரும் தமிழுக்கு வளம் செய்யும் புதினங்களை ஆர்வத்துடன் வெளியிடுகிறது. எம்.வி. வெங்கட்ராம் அவர்களின் வேள்வித் தீ என்னும் சமூக நாவலை வெளியிட்டது. அது பல பதிப்புகளைப் பெற்றது. இப்பொழுது திரைப்படமாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப் பெறுகிறது. "அரும்பு", "ஒரு பெண் போராடுகிறாள்" என்னும் இரண்டு பெரிய புதினங்களை வெளியிட்டு நல்வரவேற்பினைப் பெற்றுள்ளது. தமிழ்ப் புதினங்கள் தனித்தன்மையோடு வெற்றிநடை போடும் இக்காலத்தில், சோதனை முயற்சிகள் வரிசையில் ஊருக்குள் ஒரு புரட்சி' எழுகிறது. தமிழ் நாவலகள் உள்ளடக்கத்தாலும், உருவத்தாலும், உத்திகளாலும் உன்னத நிலையைப் பெறுகின்றன. கம்பன் குறிகளால் காட்ட முயன்றதைப் புதின ஆசிரியர்கள் விளக்கமாகவே எழுதுகின்றனர். அண்மையில வெளிவந்த சமுத்திரம் நூல்கள் வாசகர்களின் கவனத்தையும் ஈாத்துள்ளது. புதிய பத்திரிகைகளும் விரும்பி வெளியிடுகின்றன. திரு. சமுத்திரம் அவர்கள் மனித வாழ்க்கை என்னும் நிலத்தை ஆழ்நது அகழ்கிற வன்மையும், ஆற்றலும் மிக்கவர். சமூகப பிரச்சினைகளை ஆழ்ந்து சிந்திக்கும் சமுத்திரம் அவர்கள் இப் புதினத்தை துணிச்சலுடன் புதுமுறையில அமைத்துள்ளார். முதன்மை பெற்ற மூத்த திறனாயவாளர்களான டாக்டர் கைலாசபதி, டாக்டர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் வானமாமலை போன்றவர்கள் சமுத்திரம் அவாகள் கதையை நடத்திச் செலலும் நயத்தினை, கூறும் திறனை, நடை நலத்தைத் தெரிந்து உரைத்த பின்பு பதிபபகம் மேலும் என்ன பகர வேண்டியுள்ளது! இவருடைய படைபபுகளை எம். பில. பட்டத்திற்கும் ஆராய்ந்துள்ளார்கள். டாக்டர் பட்டத்திற்கும் ஆராய்ந்து வருகிறார்கள். .ர்ந்து தமது நூலகளை வெளியிட வாய்பபளித்து வரும் திரு. சமுததரம் அவர்களுக்கும் நூலாக வெளியிட இசைவு தநத திரு. இராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கும் நன்றி!