பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணால் கண்டு, காதால் கேட்டு, தீர விசாரித்துத் தெளிந்த நிகழ்ச்சிகளுள் ஒருசிலவற்றின் ஒட்டு மொத்தமான உருவமே இந்த நாவல். நிலப்பிரபுத்துவத்தின் ஆணவமும், முதலாளித்துவத்தின் கபடமும், அரசாங்க யந்திர வாதிகளின் ஏனோதானோப் போக்குகளும், கிராமங்களில் இப்போது நடைபெறும் நவீன சுரண்டலின் ஒருங்கிணைந்த மையமாக இருப்பதையும். ஏழைகள் கோழைகளாய் இருக்கும்வரை, ஏய்ப்பவர்கள்தான் மேய்ப்பவர்'களாக இருப்பார்கள் என்பதையும் விளக்கும் வகையில் இந்த நாவலை எழுதியிருப்பதாக நினைக்கிறேன். முற்போக்கு இலக்கியவாதிகள். இதை வரவேற்பார்கள் என்று கூறுவதைவிட, இந்த நாவலை வரவேற்பவர்கள்தான் முற்போக்கு இலக்கியவாதிகளாக இருக்கமுடியும் என்று சொல்லத் தோன்றுகிறது. நாவலின் முடிவு, ஒரளவு மிகையானது என்பதை அறிவேன். அதே சமயம், ஜாதிக் குடிசைகளும், சேரிக் குடிசைகளும் சேரும் நேரமே விடியல் நேரம் என்பதையும், அந்த விடியலை உணராத மக்களின் தூக்கத்தைக் கலைக்கும் சேவலொலியாக இந்த நாவல் ஒலிக்கும் என்றும் நம்புகிறேன். பிரக்ஞை பாதிப்பு, அடிமன வருடல், தேடல் என்பன போன்ற இலக்கிய ஜாலங்களைப் போட்டு, கெளதம முனிவரை திசை திருப்பும் இந்திர சேவலல்ல இது. விடியுமுன்னாலே கண்விழித்து, காடு கழனிக்குச் சென்று, கடுமையாய் உழைத்தும் விடிவு காணாத ஏழையினத்தின் நெற்றிக் கண்ணைத் திறக்கக் கூவும் வெற்றிச் சேவல் இந்த நாவல் என்று மனதார நம்புகிறேன். நான் முதன் முதலாக எழுதிய ஒரு கோட்டுக்கு வெளியே' என்ற நாவலில், பாதி பார்வையாளனாகவும், பாதி பங்காளியாகவும் இருந்தேன். அடுத்து எழுதிய சோற்றுப் பட்டாளத்தில், சற்று ஒதுங்கி நின்றேன். ஆனால் இந்த நாவலில் முதற் பகுதியில் விலகி நின்ற என்னால், இறுதிவரை அப்படி விலகி நிற்க முடியவில்லை. ஆண்டியப் பனையும், சின்னானையும், கத்தாயியையும் நான் படைத்தேன் என்பதைவிட, அந்தப் பாத்திரங்களே என்னைப் படைப்பாளியாக்கின என்று சொல்லலாம். இது, பலமா அல்லது பலவீனமா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். ஆரம்பத்தில் என்னால் படைக்கப்பட்ட இந்தப் பாத்திரங்களே, பின்னர் எனக்கு எப்படி எப்படி எழுதவேண்டும் என்று உத்தரவிட்டன! பாத்திரங்களுக்கே ஒரு பாத்திரமானேன் என்றாலும், எந்தக் கட்டத்திலும், யதார்த்தத்தை மறைக்கவில்லை. காரணம், இந்தப் பாத்திரங்கள், கிராமங்களில் பல்வேறு மனித வடிவங்களாக நிற்கின்றன. தேவி வாரப் பத்திரிகையில், ஆரம்பத்தில் நான்கைந்து அத்தியாயங்களுக்குள் தொடர்கதையாக முடித்துவிடவேண்டும் என்ற ஏற்பாட்டின்படி, எழுதத் துவங்கினேன். வாசகர்களிடையே இந்தத் தொடர் கதைக்கு ஏற்பட்ட வரவேற்பைக் கருதி, தேவி பத்திரிகை ஆசிரியர் திரு. பா. ராமச்சந்திர ஆதித்தன் அவர்கள், நான் எத்தனை