பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 51 "பெண்கள் பகுத்தறிவு மாநாடுன்னு போட்டிருக்கது ஒரு பேப்பர்ல வந்திருக்கு... படிச்சிப்பாரும். அப்பத்தான் ஒமக்குப் புத்தி வரும். பொம்புளையள... அடக்கி வச்ச காலம் மலையேறிக்கிட்டு இருக்கு." "போவடடும்... ஒய்யா ஒன்னை அடிச்சாரா..." "இல்ல... எனக்கும் கொஞ்சம் உதறல்தான். அய்யா வந்தாரு... பேசாமப் போய் கட்டிலுல படுத்தாரு... நானும் பேசாம இருந்தேன்... இப்ப ரெண்டு நாளா... நாங்க ரெண்டு பேரும் பேசுறதே கிடையாது. இதுல ஒரு நன்மையப் பாரும். கீரியும், பாம்புமா இருந்த அய்யாவும், அம்மாவும், இப்போ கோழியும் சேவலுமா ஆயிட்டாவ..." "ஆவட்டும். நீ இங்க வந்தது யாருக்கும் தெரியுமா?" "இந்தப் பாழாப்போற மாணிக்கமும், கோபாலும் நேத்து ராத்திரிதான் சொன்னாங்க... நான் மயினிகிட்ட மட்டும் சொல்லிட்டு. ஒரே ஒட்டமா ஒடி வந்தேன்." "ஆறு மைலும் நடந்தா வந்த பஸ்சில் வரப்படாது? பாவம்... என்னால ஒனக்கு ரொம்ப கஷ்டம்..." "அது கஷ்டமில்ல... இப்ப கையப் பிடிக்கியரு பாரும், அதுதான் கஷ்டம். பேசாம விலகி நடயும். ஆளப்பாரு. இதுக்குத்தான் ஒம்மகிட்ட அதிகமாய் வச்சுக்கப்படாதுன்னு நினைக்கது... எனக்குக் கெட்ட கோபம் வரும். கைய விடுறீரா இல்லியா? சீ... பஸ்ல இருக்கவங்க பாக்காங்க..." ஆண்டியப்பன் அவள் கையை விட்டான். அவள் சீறியதால் அல்ல. ஒரு பஸ்சில் இருந்து மாணிக்கமும், கோபாலும் இறங்கி வந்தார்கள். மாணிக்கம் வந்து கொண்டே பேசினான்: "ஒரு பய கூட ஜாமீன் கொடுக்க வரமாட்டேன்னுட்டான். கிணறு வெட்டப்போற ராமசாமியும், 'ஆட்டுக்கிடை' போடுற ஐயம்பெருமாள் கோனாரும் ஜாமீனுக்கு வாரேன்னு சொன்னாங்க... ஆனால், இந்த கர்ணம் இருக்காரே, அந்த பெரிய மனுஷன். இவங்களுக்கு மாத வருமான சர்டிபிக்கட் கொடுக்கமாட்டேன்னுட்டாரு... கடைசில ஒங்க பெரியய்யா பேரன்... மயில்சாமி வந்தான். மூணு ஏக்கர் நிலம் வச்சிருக்கான், தையல் கடை வச்சிருக்கான். மாசம் நானுறு ரூபாய்க்கி மேலே... வருமானம் வருது. அவன் கையில காலுல விழுந்து. ஜாமீனுக்கு வர சம்மதிக்க வச்சோம். இந்த கணக்கப் பிள்ளை , பயல் சர்டிபிகேட் கொடுக்க முடியாது... முடியவே முடியாதுன்னு சொல்லிட்டான்..." "மாசானம்?" "கழுத களவாணி மனுஷன்... நேத்து தலைமறைவா ஆயிட்டாரு... இன்னைக்கி அகப்பட்டாரு. கேட்டால், "நான் கவர்மெண்ட் காண்டி ராக்டரு... இதுல மாட்டக் கூடாது'ன்னு சொல்லிட்டார். என்ன பொல்லாத ர்? சொல்லிட்டான்..." "கோபால்... ஒன் கன்னம் ஏன் வீங்கியிருக்கு?"