பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ஊருக்குள் ஒரு புரட்சி "ஒண்னுமில்ல... ஒன்கூடச் சேரக்கூடாதுன்னு எங்க அப்பா லேசா அடிச்சாரு." அனைவரும் ஊருக்குள் வந்தார்கள். அங்கே தென்பட்ட பெரிய மனிதர்கள் அத்தனைபேரும், முகங்களைத் திருப்பிக் கொண்டார்கள். பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம், பயலை எப்படி விட்டாங்க என்ற ஆச்சரியத்தில் மூழ்கிய போது, அவரைப் பார்த்துப் பயந்து, பல ஏழைகள் ஆண்டியப்பனிடம் பேசவில்லை. ஆண்டியப்பன், தங்கம்மாவுடன் வீட்டுக்கு வந்தான். மீனாட்சியால் அழ முடியவில்லை. அண்ணாச்சி... அண்ணாச்சி என்று அந்த வார்த்தைகளின் வழியாக உயிர் பிரிவது போன்ற வேதனைப் பிளிறல். வெளிக்காட்ட நினைத்தாலும், உடம்பு ஒத்துழைப்புக் கொடுக்காத பாசத்தின் அங்க அசைவுகள். ஆண்டி, தங்கை மகனை எடுத்து வைத்துக் கொண்டே, தங்கையின் கண்களை வேட்டி முனையால் துடைத்த போதுதிடீரென்று பலமான அழுகை ஒலி கேட்டது. அது ஒலித்துக்கொண் டிருக்கும்போதே ஒருவர் வந்து, "தங்கம்மா நீயும் இவனும், டவுனுல கல்யாணம் செய்துக் கிட்டதா... மல்லிகா புரளியக் கிளப்பி இருக்காள். ஒங்க அய்யா... மருந்த குடிச்சிட்டு... துள்ளத் துடிக்கக் கிடக்காரு... சீக்கிரமா போ" என்று சொல்லிவிட்டு, அவரும் ஓடினார். தங்கம்மா, பதறியடித்து ஓடினாள். 7 அடைக்கலசாமிக் கிழவர் இறந்து விட்டார். நம்ப முடியாத உண்மை. என்றாலும் இருந்த ரோஷத்தை அது இல்லாதவர்களுக்காகவும், உடன் பிறந்த வீரத்தை உடனிருந்தே கொல்பவர்களுக்காகவும், விட்டு வைத்திருந்த அந்த வீரக் கிழவர். பூச்சி மருந்தைக் குடித்து தன்னைத்தானே கொன்று கொண்டார். ஆண்டியப்பன் வீட்டில் இருந்து, தங்கம்மா பாதி வழியைக் கடக்குமுன்பே, துள்ளத் துடிக்க வாழ்ந்த அவள் அப்பா. துள்ளத் துடிக்கச் செத்துப் போய்விட்டார். தங்கம்மா, அப்பாவின் மார்பில் புரண்டு அழுதாள். "நான் பாவிய்யா... படுபாவி... சண்டாளி... ஒம்ம நான்தான் கொன்னுட் டேன்... எங்க அய்யாவ...நானே கொன்னுட்டேனே... விடுங்க... என்னை விடுங்க... நானும் சாவணும்... அவரை வழியனுப்பி வச்சதே நான்... நானும் அவரோட போயிடணும். விடுங்க... அய்யா... அய்யா... என்னப் பெத்த அய்யா..." தலையிலும், முகத்திலுமாக, பலங்கொண்ட மட்டும், அவள் கைகளை மோதவிட்டு அடித்துக்கொண்டாள். இதனால் கையில்