பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 53 போட்டிருந்த கண்ணாடி வளையல்கள் நொறுங்கி, அவள் முகத்தில் குத்தி, ரத்தத்தைக் கொண்டு வந்தது. "அய்யாவே... அய்யாவே... ஆசையுள்ள அய்யாவே-ஒம்ம கொல்லாமல் கொன்னுட்டேனே கொலை பண்ணாமப் பண்ணிட்டனே-நான் இல்லாமல் போயிட்டேனே-நீரு எங்கேயோ போயிட்டிரே... என்னையும் கூட்டிப் போவும்... இரக்கமுள்ள அய்யாவே..." அடைக்கலசாமியின் மனைவியும் அழுது கொண்டிருந்தாள். மகளைக் கட்டிப்பிடித்து, கண்களைத் துடைத்துவிட்டு பின்பு தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள். வெளியே நாவிதர் படபடப்போடு பேசினார்: "பிணத்தைக் குளிப்பாட்ட கொண்டு வாங்கய்யா." தங்கம்மா அந்தப் பிணத்தையே பார்த்தாள். பினம் போல் பார்த்தாள். வெளியே ஒரே கூட்டம், கசமுசாப் பேச்சுக்கள். 'எதுக்கும் கலங்காதவரு எப்படிச் செத்தாரு?" "பிள்ளை குலமழித்தால் பெத்தவன் என்ன செய்வான்... இது பழமொழி." "சொந்த மகள் ஒடிப்போயிட்டாள். மானமுள்ள அப்பன் வேற எதச் செய்வான்?" "ஊரு உலகத்தில் நடக்காததா நடந்துட்டு எத்தன. பணக்கார வீட்ல கலயாணம் ஆகுமுன்னாலேயே கள்ளப் பிள்ளியள கழிச்சிக்கிட்டு இருக்காளுவ அத்தை மகனை போலீஸ் ஸ்டேஷன்ல பார்க்கப்போனது தப்பாவே சோளத்தட்டைக்குள்ளயா கூட்டிக்கிட்டுப் போனாள்?" மாடு மேய்க்கும் பையன் ஒருவன் விளக்கினான்: "முன்சீப் வீட்டுக்கு இந்த தாத்தா வந்தாரு... தங்கம்மா அத்தைக்கு வெளியூர்ல ஒரு பையனைப் பார்த்திருக்கேன்னு சொல்லிக்கிட்டு இருந்தப்போ, மல்லிகா... உள்ள இருந்து சாடப்போறது மாதிரி ஓடிவந்துக்கிட்டே ஒம்ம மகள் அத்தை மகனை மீட்டி, அப்படியே கல்யாணமும் பண்ணிக்கிட்டு வாரதுக்குப் போயிட்டாளாம். வயித்துல வேறு... மூணு மாசமாம். கல்யாணமா பண்ணப் போறிய'ன்னு கேட்டாள். உடனே இந்த தாத்தா அப்படியே இருந்தாலும்... நீ இப்படி பேசலாமாம்மா... ஒம்மாவோட சமாச்சாரம் ஒனக்குத் தெரியுமாம்மா... ஒங்க குடும்பத்துக்கு மாடாய் உழைக்கிறவன்... நாய்மாதுரி நடத்துலாமாம்மான்னு சொல்லிக்கிட்டே வெளியே வந்தார். இப்போ...