பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 55 ஆண்டியப்பன் மவுனமாக வெளியேறினான். வீட்டுக்குத்தான் போகப்பார்த்தான். அவனால் போகமுடியவில்லை. வெளியே போய், ஒரு பூவரசு மரத்தின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். மரத்தோடு மரமானவன் போல், அப்படியே சாய்ந்து கொண்டான். எல்லாம் முடிந்து ஒரு வாரமாகி விட்டது. பினத்தைத் தூக்கிப் போனபோது இரண்டு போலீஸ்காரர்கள் வந்து தற்கொலை பண்ணியிருக்கார். புதைக்கப் போனால் எப்படிவே என்று சொல்லிக் கொண்டு. அந்தப் பிணத்தை வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு, போஸ்ட் மார்டம் செய்யப் போனார்கள். தங்கம்மாவும், அவள் அம்மாவும் ஆஸ்பத்திரியின் நுழை வாயிலுக்குள் போகும்போதே, கேட்கீப்பர் கையை நீட்டப் போனார். ஆனால் விரிந்த தலையுடன், நீர் வழியும் கண்களுடன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனிடம் நியாயம் கேட்கப்போன கண்ணகிபோல் தோன்றிய தங்கம்மாவையும், ஒடிந்து போன சிலம்பு போல், ஒலைப் பாய்க்குள் முடங்கிக்கிடந்த பிணத்தையும் பார்த்தபோது, நீட்டிய கையை மடக்கிக் கொண்டார். ஆனால் ஆஸ்பத்திரியில் உள்ள 'உயிர் கீப்பர்கள் அப்படி இல்லை. எப்படிச் செத்தார். அய்யோ பாவம்' என்று வாயால் சொல்லவில்லையானாலும், மனதில் அத்தகைய உணர்வு தோன்றி. அந்த உணர்வு முகத்தில் அனுதாபமாகப் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்த்த பினச் சொந்தக்காரர்கள். கிட்டத்தட்ட பிணமாகும்படி, "பிணத்தனமாக நடந்து கொண்டார்கள். இந்தப் பூமியில் பிறந்த உயிர் ஒன்று போய்விட்டது என்ற உணர்வில்லாமலேயே, பின்னத்தைப் பார்வையிட்டவர்களின் அட்டகாசமானச் சிரிப்புக்கள்... கிரிக்கெட் உபன்யாசங்கள். அரசியல் விமர்சனங்கள்... அந்தப் பிணத்தைப் பார்த்துக்கூட, நீங்களும் ஒரு காலத்தில் பினமாகப் போகிறவர்கள்தான் என்பதை உணராத உயிர்ப்பில்லாத பேச்சுக்கள், பிணத்தை பரிசோதித்துக் கொண்டிருக்கும்போதே, அருகில் நின்ற நர்ஸ்ஸம்மாக் களுடன் வாய் விளையாட்டுக்கள்... திடீரென்று தங்கம் என்ற குரல் தங்கம்மாவுக்குக் கேட்கவில்லை யென்றாலும், அவள் தாய்க்குக் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். ஆண்டியப்பன்! தானே இறந்து, தனக்குத்தானே துக்கம் அனுசரிப்பவன்போல், மேல் துண்டை எடுத்து, வாய்க்குள் வைத்துக் கொண்டு விம்மினான். குடை சாய்ந்த வண்டி போல பாதாதி கேசம்வரை ஒரு பக்கமாகச் சாய, "மாமா மாமா..." என்றான். கிழவியால் திட்டாமல் இருக்க முடியவில்லை. "அவர அறுக்கத வேடிக்க பாக்கவால வந்த ஒன்னையும் இப்படி அறுக்குற காலம் வராமலா போவும்... எத்தனாவது சட்டப்படி நீ இங்க வரலாம். போல.. போல... நீ செஞ்சது போதும்... என் மவராசன்...