பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஊருக்குள் ஒரு புரட்சி உன்னாலயே... சாவு முன்னாலயே பிணமா போயிட்டாரு... அவரு செத்தது ஒப்புக்குத்தான்... கொலகாரப்பய... இங்க... எதுக்காவல வருத..." ஆண்டியப்பன் கேவிக் கேவி அழுதான். தங்கம்மாவைப் பார்த்தான். அவள் எதுவும் பேசவில்லை. அவன் இருக்கிறான் என்பதுபோல் பார்க்கக்கூட இல்லை... இதற்குள் கிழவி "போல... போயிடுல... நீ நின்னா... என் மவராசனோட ஆவி நிம்மதியா இருக்காது..." என்று சொன்னபோது. ஆண்டியப்பன் அங்கிருந்து நகர்ந்து நகர்ந்து, நடந்து நடந்து, எங்கேயோ போய்விட்டான். பிணத்தைக் கொண்டுவந்து, மூன்று மணி நேரம் ஆகியும், முறையான பரிசோதனை ரிப்போர்ட் கிடைக்கவில்லை. ஆர்.எம்.ஒ. எங்கேயோ போய்விட்டாராம். ஆனால் அதற்குப் பிறகு வந்த இரண்டு வசதியான பிணங்கள், வந்தது தெரியாமலே போய்விட்டன. தங்கம்மாவுக்கு, ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. அட கடவுளே... பிணமான பிறகு கூட ஒருவன் சுதந்திரமாக விடப்பட மாட்டானோ... பிணத்திற்குக்கூட ரேட்டா? இங்கே இருப்பவர்கள் மனிதர்களா... இல்ல. சுடுகாட்டில்... சமாதிகளில் நீட்டிக்கொண்டிருக்கும் கற்களா... பிறப்பது தெரியாமல் பிறந்து, போவது தெரியாமல் போகும் ஏழை மீது எத்தனை கரிசனம்... அறுபது வருஷமாய் உழைப்பையும், நன்றி விசுவாசத்தையும் தவிர, எதையுமே அறியாத அய்யாமீது எவ்வளவு பாசம்... கொஞ்ச நேரம் அவரை ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று எவ்வளவு பெரிய இரக்கம்... அய்யா... நீரு... கொடுத்துவச்சவரு... நீரு. சாவுறது வரைக்கும்... பண்ணை யாருங்களுக்கு கைகட்டி கால்கட்டி நின்னியரு... இப்போ அதுக்குப் பிரதியா... அவர்களோட தூண்டுதலால்... டாக்டர் துரைமாரு மவராசன்மாருங்க... ஒம்ம கையைக் காலை. எப்படிக் கட்டுறாங்க... இந்த மாதிரி வாழ்க்க யாருக்கய்யா கிடைக்கும்... யாருக்குக் கிடைக்கும்...” தங்கம்மாள் விம்மியபோது, கிழவி அவளுக்கு ஆறுதல் சொன்னாள். ஆஸ்பத்திரிக்குள் நுழையும் போது, வெள்ளை யூனிபாரத்தில்: வனதேவதைபோலத் தோன்றிய நர்ஸம்மாக்கள், இப்போது அவளுக்கு விதவைகள் போல் தோன்றினார்கள். எப்போ ரிப்போர்ட் கிடைக்கும்... எப்போ பிணத்துக்கு விடுதலை கிடைக்கும்... அவர்கள் தவித்துக் கொண்டிருந்தபோது, சின்னான் வந்தான். கிழவி முகத்தைத் திருப்பிக் கொண்டாளே தவிர, திட்டவில்லை. "ஏய்... கிழவி... இது என்ன உன் வீடுன்னு நினைச்சியா ரிப்போர்ட் ரெடியானால் தரமாட்டோம்?" என்று ஒரு வெள்ளை யூனிபாரக்காரி விரட்டியதால், அவளால், சின்னானை விரட்ட முடியவில்லை. சின்னான் அங்குமிங்குமாக அலைந்து, ஒருவழியாக பிணத்தை எடுத்தான். பிணத்தின் கால் இரண்டையும் இழுத்துக் கொண்டு வந்தே.