பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் § 1. மாணிக்கத்திற்கு என்னவோ போலிருந்தது. பேசாமல் தனது இ. ந. மன்றத்தையும் குமாரின் இ.பெ. மன்றத்தையும் ஒன்றாக இணைத்து விடலாமா... கீரியும், பாம்புமாக இருந்தவர்கள் இப்படி விவஸ்தை இல்லாமல் சேருகிறார்களே என்று யாராவது சொல்ல மாட்டார்களா... எப்படிச் சொல்வார்கள் இப்போது, யாருக்கு விவஸ்தை இருக்கு? விவஸ்தை கெட்ட குணம்கூட, விவேகமாக அல்லவா கருதப்படுகிறது. மாணிக்கத்திற்கு, யோசிக்க யோசிக்க ஆண்டியப்பன் மீது அலுப்புத் தட்டியது. ராசியில்லாத பயல்... இவனால்... எனக்கு வேலை கூட கிடைக்கல... ஊர்ல ஒருவர் கூட மதிக்கல - என்ன செய்யலாம்? என்னதான் அவன் யோசித்தாலும் அவன் கால்கள் மூளையின் கட்டளையை மீறியவைபோல் ஆண்டியப்பனின் வீட்டைப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தன. அதோடு அங்கே மாட்டு விவகாரத்துக்கான வியூகத்தைப் பேசி முடிக்க வேண்டும் கோபால் அங்கே இருப்பான். ஒருசில இளைஞர்களும் இதற்குள் அங்கே கூடியிருப்பார்கள். 'மாட்டு விவகாரம், போலீஸ் நிலையத்தில் இருந்து ரிலீஸ் ஆனதும், மாணிக்கமும், அவன் கூட்டாளிகளும் ஆண்டியப்பனை அழைத்துக் கொண்டு போய், கோட்ட ஆட்சித் தலைவரிடம் காட்டினார்கள். அவர் கோட்ட வளர்ச்சி அதிகாரியின் விவகாரம் என்றார். இவர்களும் வளர்ச்சி அதிகாரியைப் பார்த்தார்கள். அவர் பால்பண்ணை அதிகாரியிடம் கை காட்டினார். பார்த்தார்கள். பால்பண்ணை அதிகாரி, கூட்டுறவு டெப்டி ரிஜிஸ்தரார் தப்பாய் நினைப்பார். ஏன்னா... இது அவரோட விவகாரம் என்றார். இவர்களும் அந்த டெப்டியைப் பார்த்தார்கள். அவரோ புராஜெக்ட் அதிகாரியிடம் போங்கள் என்றார். புராஜெக்ட் அதிகாரி கேம்ப் போய்விட்டார். திரும்பி வரப்போனவர்களுக்கு ஒரு திடீர் யோசனை வந்தது. காரில் ஏறப்போன கலெக்டரிடம், வழிமறிப்பது போல் நின்று நடந்த விவகாரத்தை மீண்டும் சொன்னார்கள். கலெக்டர் சொன்னபடி விவகாரத்தை மீண்டும் எழுதி அவரது உதவியாளரிடம் கொடுத்தார்கள். என்ன ஆச்சுது என்று தெரியவில்லை. மாணிக்கம் நடந்து கொண்டே யோசித்தான். மாலை நேரம் மதி: மயங்கும் கருக்கல் பொழுது. ஒற்றையடிப் பாதை வழியாக நடந்துகொண்டிருந்தவனின் எதிரே மலலிகா வந்து கொண்டிருந்தாள். மயக்கு விழி இருக்கோ இல்லையோ கண்ணில் மை தடவிய அந்தத் தவப்புதல்வி மாணிக்கத்தைப் பார்த்து உதட்டைக் கடித்துச் சிரித்துக்கொண்டே வந்தாள். மாணிக்கம் எட்டாவது படித்தபோது, அதே உள்ளுர் பள்ளியில் ஐந்தாவது படித்தவள் இவள். அப்போது மாணிக்கம் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திருக் கிறான். ஏபிஸி.டி... எங்கப்பன் தாடி... ஒபிஸி.டி... ஒங்கப்பன் பேடி'